ETV Bharat / state

100 ரூபாய் வராத ஆத்திரத்தில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்த வாலிபர்!

சாத்தான்குளம் அருகே பேய்குளம் பகுதியில் ஏடிஎம் இயந்திரத்தில் 100 ரூபாய் எடுக்க முயற்சித்த வாலிபர் பணம் வராத ஆத்திரத்தில் தனது கையால் இயந்திரத்தை அடித்து உடைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Apr 12, 2023, 10:13 AM IST

தூத்துக்குடி: சாத்தான்குளம் அருகே உள்ள பேய்குளம் பகுதியில் கனரா வங்கி மற்றும் அதனுடன் இணைந்த ஏடிஎம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஏடிஎம்மில் கடந்த சில மாதங்களாக 100 மற்றும் 200 ரூபாய் பணம் வரவில்லை என பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்களால் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

மேலும் அவசர தேவைக்கு மெடிக்கல் மற்றும் மளிகை கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக பணம் எடுக்கும் வாடிக்கையாளர்கள் நூறு ரூபாய் இல்லாமல் தவித்து வந்துள்ளனர். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஹென்றி என்ற வாலிபர் ஏடிஎம்முக்கு 100 ரூபாய் பணம் எடுக்க வந்ததாக கூறப்படுகிறது. அப்போது ஏடிஎம் இயந்திரத்தில் 100 ரூபாய் வராததால் அங்கு ஊழியர்களிடம் இது குறித்து கேட்க சென்றுள்ளார்.

ஆனால் வங்கி ஊழியர்கள் சரியான முறையில் பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஹென்றி மீண்டும் ஏடிஎம் இயந்திரத்திற்கு வந்து 100 ரூபாய் வராத ஆத்திரத்தில் தனது முழு பலத்தையும் கூட்டி "ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா" என்ற சினிமா காட்சி போல ஒரே கையில் அடித்து இயந்திரத்தை உடைத்துள்ளார்.

மேலும் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்த ஹென்றியை சாத்தான்குளம் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: Prashant Umrao: வடமாநில தொழிலாளர்கள் குறித்த வதந்தி: உ.பி பாஜக நிர்வாகி தூத்துக்குடியில் ஆஜர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.