தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வல்லநாட்டில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளது. இந்த கட்டிடம் சுமார் 53 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. அதன் பின்னர் இந்த கட்டிடத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெறவில்லை.
இந்த வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தைப் பொறுத்தவரை வல்லநாடு சுற்றுவட்டாரப்பகுதிகளை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட குக்கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்பெற்று வருகின்றனர். தினம்தோறும் 100க்கும் மேற்பட்டோர் வெளி நோயாளிகளாகச் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கர்ப்பிணி பெண்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆனால் இந்த கட்டிடம் மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளது. இந்த கட்டிடத்தின் மேற்கூரை பெயர்ந்து விழும் நிலையில், மேற்கூரையில் உள்ள பூச்சு ஆங்காங்கே பெயர்ந்து விழுகிறது. தற்போது பெய்து வரும் சிறு சிறு மழைக்குக் கூட ஆங்காங்கே நீரூற்று ஏற்பட்டுள்ளது.
ஆகவே, இந்த கட்டிடமானது இன்று பெயர்ந்து விழவா? அல்லது நாளை பெயர்ந்து விழவா? என்று காத்துக் கொண்டிருக்கிறது.
இதையும் படிங்க: மாவு மெஷினில் சிக்கிய துப்பட்டா.. பெண் நூலகர் மரணம்!