தூத்துக்குடி: தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் தூத்துக்குடி தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று (ஜூன்6) வாயிற் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு, மாவட்டத் தலைவர் அ.யூஜின் தலைமையேற்றார். மாவட்ட செயலர் மூக்கையா முன்னிலை வகித்தார்.
தூத்துக்குடி கல்வி மாவட்டத் தலைவர் நம்பிராஜன் வரவேற்புரை வழங்கினார். மாநில பொதுச் செயலாளர் இரா.பிரபாகரன் சிறப்புரையாற்றினார். இந்தக் கூட்டத்தில், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ரத்து, நீட் தேர்வு ரத்து, கரோனா காலத்தில் ஆசிரியர்கள் இழந்த சலுகைகளான அகவிலைப்படி (D.A) மற்றும் ஈட்டிய விடுப்பு (E.L) ஒப்படைத்து பணம் பெறும் முறை மீண்டும் வழங்க வேண்டும்.
மேலும், நான்கு வருடங்களுக்கு மேல் ஊதியம் வழங்கப்படாத அரசு உதவிபெறும் பள்ளிகளிலுள்ள முதுகலை ஆசிரியர்களை பணிவரன்முறை செய்தல், முதுகலைத் தொகுதிக்கு தனி இயக்குநரகம் ஏற்படுத்துதல் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதையும் படிங்க: மதுபோதையில் தாயிடம் பணம் கேட்ட அண்ணன்: அடித்துக் கொலை செய்த தம்பி!