ETV Bharat / state

முன்ஜாமின் கேட்டவருக்கு வித்தியாசமான முறையில் ஜாமின் வழங்கிய நீதிபதி!

தூத்துக்குடி: குற்ற வழக்கில் முன்ஜாமின் கேட்டவருக்கு மாவட்ட நீதிபதி வித்தியசமான நிபந்தனையுடன் முன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

பதாகையுடன் நிற்கும் இளைஞர்
author img

By

Published : Nov 6, 2019, 10:38 PM IST

தூத்துக்குடி மட்டக்கடை சேதுராஜா தெருவைச் சேர்ந்தவர் கணேசன் மகன் ஹரிஹரன். இவர் கடந்த மாதம் 17ஆம் தேதி அதே பகுதியில் இயங்கும் அரசு தொழில்நுட்ப பயற்சி மையத்தில் அத்துமீறி நுழைந்து ஊழியர்களை அவதூறாகப் பேசி தாக்கியுள்ளார். இது குறித்து பயற்சி மைய முதல்வர் கொடுத்த புகாரின் பேரில் சிப்காட் காவல் துறையினர் ஹரிஹரனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், வழக்கில் இருந்து ஜாமின் வழங்க வேண்டும் என மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஹரிஹரன் மனுதாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி சுரேஷ் விஸ்வநாத் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி மனுதாரர் ஹரிஹரன் தினமும் காலை 10 மணிக்கு அரசு தொழில் பயிற்சி மையத்திற்கு சென்று மூன்று மரக்கன்று வீதம் 10 நாட்களுக்கு நட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் முன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.

பதாகையுடன் நிற்கும் இளைஞர்
பதாகையுடன் நிற்கும் இளைஞர்

நீதிபதி உத்தரவின் பேரில் இன்று அரசு தொழில் பயிற்சி மையத்திற்கு சென்று ஹரிஹரன் மரக்கன்றுகளை நட்டார். அவர் மரக்கன்று நடும் போது கல்லூரி உதவி இயக்குநர் பழனி, உடற்பயிற்சி ஆசிரியர் நேவிஸ், பயிற்சி அதிகாரி வள்ளி மற்றும் மனுதாரரின் வழக்கறிஞர் அதிசய குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க: ஜெயகோபால், மேகநாதன் ஜாமினை வாபஸ் பெற நீதிமன்றம் அனுமதி!

Intro:தூத்துக்குடி நீதிமன்றத்தில் குற்ற வழக்கில் முன் ஜாமீன் கேட்டவருக்கு நீதிபதி முன் ஜாமீன் வழங்கி விசித்திரமான உத்தரவுBody:
தூத்துக்குடி

தூத்துக்குடி மட்டக்கடை சேது ராஜா தெருவை சார்ந்தவர் கணேசன் மகன் ஹரிஹரன். இவர் கடந்த 17.10.2019 அன்று அரசு தொழில் நுட்ப கல்லூரியில் அத்துமீறி நுழைந்து ஊழியர்களை அவதூறாக பேசி அடித்ததாக கல்லூரி முதல்வர் கொடுத்த புகாரின் பேரில் தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் முன்ஜாமீன் கோரி தூத்துக்குடி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கறிஞர் அதிசயகுமார் மூலம் மனு தாக்கல் செய்தார்.

மேற்படி மனுவின் பேரில் தூத்துக்குடி மாவட்ட அமர்வு நீதிபதி சுரேஷ் விஸ்வநாத் மனுதாரர் ஹரிஹரன் தினமும் காலை 10 மணிக்கு அரசு தொழில் பயிற்சி கல்லூரியில் மூன்று மரக்கன்றுகளை 10 நாட்கள் நட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அதன் பேரில் இன்று 6.11.2019 ல் அரசு தொழில் பயிற்சி மையத்தில் மனுதாரர் ஹரிஹரன் மரக்கன்றுகளை நட்டார். அவர் மரம் நடும் போது கல்லூரி உதவி இயக்குனர் பழனி, உடற்பயிற்சி ஆசிரியர் நேவிஸ், பயிற்சி அதிகாரி வள்ளி மற்றும் மனுதாரரின் வழக்கறிஞர் அதிசய குமார் ஆகியோர் உடன் இருந்தனர். மேலும் மனுதாரர் மரம் வளர்ப்போம் மழை பெறுவோம், மரம் நமக்கு நண்பன் என்ற வாசகம் அடங்கிய பதாகையினை தாங்கியபடி மரம் நட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் அரசு வழக்கறிஞர் ஆண்ட்ரூமணி ஆஜரானார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.