தூத்துக்குடி: பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி முத்தையாபுரம் ராஜீவ் நகரைச் சேர்ந்த செல்வராஜ் மகன் ஆனந்தராஜ் (56), அம்மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் தான் பயிற்றுவிக்கும் படிக்கும் 10 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த அந்தச் சிறுமி தனது தாயாரிடம் கூறியுள்ளார். இதுகுறித்து தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் வனிதா விசாரணை நடத்தி, போக்சோ வழக்கில் தலைமை ஆசிரியர் ஆனந்தராஜை கைது செய்தார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.