ETV Bharat / state

வாயில் சங்கிலி சுற்றப்பட்ட நாய் - பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறை - நாய்க்கு மறுவாழ்வு கொடுத்த கிராம மக்கள்

தூத்துக்குடி அருகே நாய் வாயில் சங்கிலியால் சுற்றப்பட்டு பூட்டிய நிலையில் உணவு சாப்பிட முடியாமல் தவித்த நாயின் வாயில் இருந்த சங்கிலியை தீயணைப்பு துறையினர் அகற்றினர்.

வாயில் சங்கிலி சுற்றப்பட்ட நாய்
வாயில் சங்கிலி சுற்றப்பட்ட நாய்
author img

By

Published : Jul 10, 2022, 4:44 PM IST

தூத்துக்குடி: தட்டார்மடம் அருகே கடந்த ஒரு மாத காலமாக ஒரு நாய் வாயில் சங்கிலியால் சுற்றப்பட்டு பூட்டிய நிலையில் உணவருந்த முடியாமல் அங்கும் இங்கும் சுற்றி திரிந்து வந்தது. இதனையறிந்த அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அப்பகுதி வழியாக வந்த அந்த நாய்க்கு பிஸ்கட் கொடுத்து அங்கேயே சிறிது நேரம் நிறுத்தி வைத்திருந்தனர்.

அப்போது அங்கிருந்தவர்கள் சாத்தான்குளம் தீயணைப்புத் துறையினருக்கு அளித்த தகவலின் பெயரில் அங்கு சென்ற தீயணைப்பு நிலைய அலுவலர் மாரியப்பன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக அந்த நாயின் வாயிலிருந்த சங்கிலி மற்றும் பூட்டை அகற்ற முற்பட்டனர்.

சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாகியும் வலியால் துடித்த அந்த நாயை பிடிக்க முடியாததால் அங்கிருந்த தீயணைப்பு வீரர் சங்கரலிங்கம் சமயோஜிதமாக செயல்பட்டு அந்த நாயின் பின்புறத்தில் சென்று நாயை அலேக்காக தூக்கி இரண்டு சுற்று சுற்றினார்.

அப்போது அங்கிருந்த மற்ற தீயணைப்பு வீரர்கள் அந்த நாயின் வாயை நைசாக பிடித்தனர். அதன் வாயில் சங்கிலியால் இறுக்கமாக சுற்றப்பட்டு பூட்டு போடப்பட்டிருந்த அந்தப் பூட்டு மற்றும் சங்கிலியை பெரிய சைஸ் கொறடால் தீயணைப்பு வீரர்கள் வெட்டி அப்புறப்படுத்தினர்.

அந்த நாயின் வாய் பூட்டை அகற்றியதால் சந்தோஷத்தில் துள்ளி குதித்து ஓடிய அந்த நாயை கண்டு அங்கிருந்த பொதுமக்கள் பிரமித்தனர். நாயின் வாய் பூட்டை அகற்றிய வீரர்களை அங்கிருந்த பொதுமக்கள் கைதட்டி பாராட்டினர்.

வாயில் சங்கிலி சுற்றப்பட்ட நாய்

வீட்டில் நாயை வளர்க்காவிட்டாலும் பரவாயில்லை...! வீட்டில் நாயை ஆசைப்பட்டு வளர்த்து விட்டு அது வளர்ந்த பின்னர் அதற்கு உணவளிக்க முடியாமலும், பக்குவம் பார்க்க முடியாமல் இதுபோல வாயில் சங்கிலியால் கட்டி, பூட்டால் இறுக்கமாக பூட்டி, இதுபோல சாலையில் விட்டு செல்லும் இரக்கமற்ற மனிதர்களின் செயலால் இதுபோல பல உயிர்கள் அன்னம், தண்ணீரின்றி உயிர் விட்டிருக்கின்றன. எனவே இதுபோல செயல்களில் எவரும் ஈடுபட வேண்டாம் என சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க: Watch: இளைஞர்கள் பெட்ரோல் திருடும் சிசிடிவி காட்சி....

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.