தூத்துக்குடி: தமிழ்நாடு மின் ஊழியர்கள் மத்திய அமைப்பு சிஐடியு சார்பில் தூத்துக்குடி, அனல்மின் நிலையத்தில் (1000 மெகாவாட்) தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனல்மின் நிலையம் முன்பு தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
என்டிபிஎல் அனல் மின் நிலையத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தர ஊழியராக அறிவித்து, ’சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட வேண்டும்; அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் பண்டிகை விடுமுறை, தேசிய விடுமுறை வழங்கி போனஸ் வழங்கிட வேண்டும்;
பல ஆண்டுகளாகப் பணிபுரிந்து வரும் என்டிபிஎல் அனல் மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஆறு நாட்கள் தொடர்ச்சியாக பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய சம்பளம் வழங்கிட வேண்டும்; ஒப்பந்த தொழிலாளர்கள் விடுப்பு எடுத்தால் தண்டனை ஊதியம் ஒன்றரை மடங்கு பிடித்தம் செய்யக்கூடாது; மேலும், தொழிற்சாலையில், கேண்டின், கழிவறை, குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து 150க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து, தூத்துக்குடி, அனல்மின் நிலையத்தில் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பாஜகவின் குழப்பமான ஆதரவு அதிமுகவிற்கு பயன் தராது - கனிமொழி எம்.பி