ETV Bharat / state

தூத்துக்குடியில் வெள்ளம் பாதித்த இடங்களில் மத்தியக் குழுவினர் நாளை (டிச.20) ஆய்வு..! - தமிழ்நாடு முதலமைச்சர்

Tuticorin Flood: தூத்துக்குடியில் வெள்ளம் பாதித்த இடங்களில் மத்தியக் குழுவினர் நாளை (டிச.20) ஆய்வு செய்ய உள்ளனர். அதனைத்தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மறுதினம்(டிச.21) ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.

Tuticorin Flood
தூத்துக்குடியில் வெள்ளம் பாதித்த இடங்களில் மத்தியக் குழுவினர் நாளை(டிச.20) ஆய்வு..!
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 19, 2023, 11:02 PM IST

தூத்துக்குடி: தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த டிச. 17, 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையின் காரணமாக, பல இடங்களில் மழைநீர் சூழ்ந்து வெள்ளம் ஏற்பட்டு கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

இதனை எதிர்கொள்ளவும், மக்களுக்குத் தேவையான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள அமைச்சர்கள் மற்றும் இந்திய ஆட்சி பணி அலுவலர்களும் உடனடியாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

மேலும், அப்பகுதிகளில் மாநில பேரிடர் மீட்புக் குழு, தேசிய பேரிடர் மீட்புக் குழு, தீயணைப்புத்துறை, காவல் துறையினர் மற்றும் அனைத்து அரசுத்துறைகளுடன் இணைந்து ஒருங்கிணைந்த முறையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பாதிக்கப்பட்ட மக்கள் மீட்கப்பட்டுப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு வருகிறார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

  • மத்தியக் குழுவினர் தூத்துக்குடியில் நாளை ஆய்வு - மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நாளை மறுதினம் தூத்துக்குடிக்கு ஆய்வு மேற்கொள்கிறார் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு.#CMMKSTALIN | #TNDIPR |@CMOTamilnadu @mkstalin@mp_saminathan pic.twitter.com/sPOn9oyntQ

    — TN DIPR (@TNDIPRNEWS) December 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

முன்னதாக, நாளை(டிச.20) தூத்துக்குடிக்குச் செல்வதாக அறிவித்திருந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்தியக் குழு நாளை தூத்துக்குடி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ள உள்ளதால், மாவட்ட நிர்வாகம் அவர்களுக்கு உடனிருக்க வேண்டிய நிலையைக் கருத்தில் கொண்டு, நாளை இரவு மதுரை சென்று அடுத்த நாள் (21.12.2023) தூத்துக்குடியில் ஆய்வு மேற்கொள்கிறார்.

இதையும் படிங்க: இனிவரும் காலங்களில் மழையும், வறட்சியும் அதிகரிக்குமா - ஆராய்ச்சியாளர்கள் கூறுவது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.