தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து அவர் பேசுகையில், ’கடந்த 45 வருடங்களாக இல்லாத அளவுக்கு இந்திய பொருளாதாரத்தில் வீழ்ச்சியை பார்க்கமுடிகிறது. வேலை இல்லா திண்டாட்டம் மக்களை பெரிதும் பாதித்துள்ளது. இதனை சரி செய்ய மத்திய அரசு எந்த முயற்சியும் செய்யாமல் உள்ளது.
கடந்த முறை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது உலகளவில் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துகொண்டிருந்தபோதும் இந்திய பொருளாதாரம் பாதுகாக்கப்பட்டது.
ரிசர்வ் வங்கியின் உபரி நிதியை மத்திய அரசு பயன்படுத்த நினைப்பது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும்.