ETV Bharat / state

தட்டார்மடம் வியாபாரி கொலை வழக்கு: காவல் ஆய்வாளரை கைது செய்ய கோரிக்கை - காவல் ஆய்வாளரை கைது செய்ய கோரிக்கை

தூத்துக்குடி: தட்டார்மடம் வியாபாரி கொலைக்கு உடந்தையாக செயல்பட்ட காவல் ஆய்வாளரை உடனடியாக கைது செய்யக்கோரி கணவரை இழந்த ஜீவிதா தூத்துக்குடி ஆட்சியரிடம் மனு அளித்தார்.

thoothukkudi
thoothukkudi
author img

By

Published : Oct 19, 2020, 5:59 PM IST

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அடுத்த தட்டார்மடத்தைச் சேர்ந்தவர் செல்வன். தண்ணீர் கேன் வியாபாரியான இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு, அதே பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் திருமணவேல் என்பவரால் காரில் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக திசையன்விளை காவல் நிலையத்தில் அளித்தப் புகாரின் பேரில் தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன், அதிமுக பிரமுகர் உள்பட 7 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். வழக்கு விசாரணையை சிபிசிஐடி வசம் ஒப்படைத்து, தமிழ்நாடு காவல்துறை தலைவர் திரிபாதி உத்தரவிட்டார். சிபிசிஐடி காவல் துறையினர் நடத்திய விசாரணையில் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் உள்பட மற்ற அனைவர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

கொலை சம்பவத்துக்கு உடந்தையாக இருந்த காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணனை நெல்லை சரக டிஐஜி பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் செல்வனின் மனைவி ஜீவிதா மற்றும் அவரது குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(அக்.19) பரபரப்பு புகார் ஒன்றை அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் ஜீவிதா கூறியதாவது, "எனது கணவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் உடந்தையாக செயல்பட்டார். காவல் துறையினர் நடத்திய விசாரணையில் தட்டார்மடம் காவல் ஆய்வாளரைத் தவிர, மற்ற அனைவரையும் கைது செய்துள்ளனர். ஆனால், வழக்கில் சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் கிருஷ்ணனை இதுவரை கைது செய்யவில்லை.

காவல் ஆய்வாளரை கைது செய்ய வேண்டும்

பாதிக்கப்பட்ட எனக்கு அரசு வேலையும், பசுமை வீடு கட்டித் தருவதாகவும் மாவட்ட நிர்வாகம் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. ஆனால், இதுவரை அதற்கான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. காவல் ஆய்வாளர் ஹரி கிருஷ்ணனை கைது செய்ய வலியுறுத்தியும், அரசு வேலை வழங்கிட, பசுமை வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்துள்ளோம். நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் உறுதி அளித்துள்ளார்" என்றார்.

இதையும் படிங்க: '800' படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.