ETV Bharat / state

'திமுக தலைமை, காங்கிரஸ் வழிகாட்டல்'- சிஏஏ எதிர்ப்பு குறித்து பொன்னார்! - பொன். ராதாகிருஷ்ணன்

தூத்துக்குடி: தமிழ்நாட்டில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெறும் போராட்டங்களுக்கு திமுக தலைமை தாங்குகிறது, காங்கிரஸ் வழிகாட்டுகிறது என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் குற்றஞ்சாட்டினார்.

மீண்டும் ஒரு பிரிவினைக்காக பயங்கரவாதிகள் தயாராகின்றனர் -பொன். ராதாகிருஷ்ணன்!

author img

By

Published : Feb 29, 2020, 3:27 AM IST

குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து, பா. ஜனதா சார்பில் தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் நோக்கி பேரணி நடந்தது.

இந்தப் பேரணிக்கு பாஜக மூத்த தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பொன் ராதகிருஷ்ணன், “இல்லாத மேடையிட்டு, எழுதாத நாடகத்தை எல்லோரும் நடிக்கிறோம் என்று பாட்டு ஒன்று உண்டு.

அந்தப் பாட்டின் கருத்தை அப்படியே நடைமுறைப்படுத்தும் விதமாக, சிஏஏ இஸ்லாமியர்கள், சாதாரண மக்களுக்கு எதிரான சட்டம் என்ற அச்சத்தை ஏற்படுத்தி தேசப்பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் பயங்கரவாதிகள் உருவாகியுள்ளனர்.

அவர்களுக்கு திமுக தலைமை தாங்குகிறது. காங்கிரஸ் வழிகாட்டுகிறது. நாட்டிற்கு எதிராக அடுத்த யுத்தத்திற்கு தேச துரோகிகள் களம் இறக்கிவிடபட்டுள்ளனர். இப்படிப்பட்ட சக்திகள் நசுக்கப்பட வேண்டும்.

பயங்கரவாதிகள் மீண்டும் பிரிவினை வாதத்திற்கு தயாராகி வருகிறார்கள். மதத்தலைவர்கள் அரசியலில் புகுந்து கலவரத்தை உருவாக்கி கொண்டிருக்கிறார்கள். இதனை ஒருகாலமும் ஏற்றுக்கொள்ள முடியாது.

பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி

கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் என்று யாரையும் அரசாங்கம் பிரித்து பார்க்கவில்லை. பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம் அனைவருக்கும் பொதுவாக இந்த சட்டத்தை கொண்டுவந்துள்ளது” என்றார்.

இதையும் படிங்க... மருத்துவர் நியமனத்தில் முறைகேடு: பேரவை துணைத் தலைவரே புகாரளித்ததால் பரபரப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.