ETV Bharat / state

ரத்தத் சொட்ட மதுவை கொள்ளையடித்த மது வெறியன் - பூட்டி சீல் வைக்கப்பட்டது

தூத்துக்குடி: டாஸ்மாக் மதுபானக் கடையில் சுவர் ஏறி குதித்து மதுபாட்டில்களை அடையாளம் தெரியாத நபர் திருடிச் சென்றுள்ளார்.

கைவரிசையை காட்டிய மது வெறியர்கள்
கைவரிசையை காட்டிய மது வெறியர்கள்
author img

By

Published : Apr 16, 2020, 3:51 PM IST

தூத்துக்குடி மாவட்டத்தில் 145 டாஸ்மாக் மதுபானக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. பரவி வரும் கரோனா தொற்று காரணமாக அனைத்து மதுபானக் கடைகளும் அரசின் மறு உத்தரவு வரும் வரை மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் மதுபோதைக்கு அடிமையான நபர்கள் மது அருந்தமுடியாமல் ஆங்காங்கே குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சூழலை பயன்படுத்தி கள்ளத்தனமாக மது விற்பனையில் சிலர் ஈடுபட்டும் வருகின்றனர். இதை காவல் துறையினர் தடுக்கும் செயல்களும் நடைபெற்று வருகிறது. மேலும் சில இடங்களில் டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.

கைவரிசையை காட்டிய மது வெறியர்கள்
அதுபோல தூத்துக்குடி மாநகரின் முக்கிய சாலையான வி.இ.ரோட்டில் உள்ள அரசு மதுபானக் கடையில் புகுந்த மர்ம ஆசாமி கடையிலிருந்த மது பாட்டில்களை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கடைக்கு மூன்று வாசல்கள் உள்ளன. மது விற்பனைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில் மூன்று வாசல்களும் பூட்டி சீல் வைக்கப்பட்டு இருந்தன. இந்த நிலையில் நள்ளிரவு மதுக்கடைக்கு வந்த அடையாளம் தெரியாத நபர் பூட்டை உடைக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் அந்த முயற்சி பலனளிக்காமல் போகவே அவர் அருகிலிருந்த கடையின் உயரமான இடத்திலிருந்து மதுக் கடையின் மீது ஏறி மாடி வழியாக கடைக்குள் சென்று கடையிலிருந்த உயர் ரக மது பாட்டில்களை பெட்டி பெட்டியாக எடுத்துக்கொண்டு மீண்டும் மாடி வழியாக தப்பிச் செல்ல முயன்ற போது கை தவறி மதுபான பெட்டிகள் கீழே விழுந்து உடைந்துள்ளன. இதில் எதிர்பாராதவிதமாக அடையாளம் தெரியாத நபர் காலில் உடைந்த மதுபாட்டில்களின் கண்ணாடி துண்டுகள் கிழித்து ரத்தம் கடை சுவற்றின் மீது படிந்திருந்தது. தொடர்ந்து கையில் கிடைத்த மதுபான பாட்டில்களை மட்டும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இந்நிலையில் அவ்வழியாக வந்தவர்கள் டாஸ்மாக் மதுபான கடையில் கொள்ளை முயற்சி நடந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து இதுகுறித்த தகவல் தூத்துக்குடி காவல் துறையினருக்கும், மாவட்ட டாஸ்மாக் மேலாளருக்கும் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அலுவலர்கள் கடையில் கொள்ளை முயற்சி நடந்து இருப்பது குறித்து ஆய்வு செய்தனர். சம்பவ இடத்திற்கு தடய அறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளையில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத நபர் குறித்த தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.