தூத்துக்குடி: தமிழ்நாடு விஸ்வகர்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் பொதுமக்களுக்கு தூத்துக்குடி மாநகர பகுதிகளில் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு விஸ்வகர்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தூத்துக்குடி மாநகர பகுதிகளான பாலவிநாயகர் கோயில் தெரு, குமாரர் தெரு, அழகேசபுரம், மாதா நகர், விஸ்வபுரம், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு நேற்று (ஜூன் 1) வழங்கப்பட்டது. இதற்கு அக்கழகத்தின் தலைவர் மூர்த்தி தலைமை தாங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, “நவீன இயந்திரம் மூலம் தற்போது நகை செய்யப்படுவதால் நகை செய்யும் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நீட்டிக்கபட்டுள்ளதால் அவர்களின் வாழ்வாதாரம் மேலும் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே தமிழ்நாடு அரசு அவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு நகை தொழிலாளர்களுக்கு மாதம் ரூ. 10,000 நிவாரண தொகை வழங்க வேண்டும்” என தெரிவித்தார்.
இந்நிகழ்வின் போது மாநில பொருளாளர் இசக்கி முத்து, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் ரீகன், முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: கறுப்பு பூஞ்சை பாதிப்பு: மருத்துவமனையில் 518 பேர் சிகிச்சை!