ETV Bharat / state

கல்குவாரிகளை அதிகாரிகள் சரியாக ஆய்வு செய்வதில்லை - கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு! - Tamil Nadu Congress chief KS Alagiri says quarries are not properly inspected by authorities

கல்குவாரிகளை அதிகாரிகள் சரியாக ஆய்வு செய்வதில்லை என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டியுள்ளார்.

கல்குவாரிகளை அதிகாரிகள் சரியாக ஆய்வு செய்வதில்லை - கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு! Tamil Nadu Congress chief KS Alagiri says quarries are not properly inspected by authorities

author img

By

Published : May 17, 2022, 8:12 AM IST

Updated : May 17, 2022, 9:35 AM IST

தூத்துக்குடி: நெல்லையில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்திராகாந்தி, காமராசர் வெண்கலசிலை திறப்பு விழாவில் கலந்து கொள்ள சென்னையில் இருந்து விமானம் மூலம் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தூத்துக்குடி வந்தார்.

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், "மோடி அரசின் மிக மோசமான செயல்பாடுகளில் ஒன்று சமையல் எரிவாயு விலை உயர்வு. தவறான பொருளாதார கொள்கையினால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

லாக்அப் டெத் தில் இரண்டு வகைகள் உண்டு. இதற்கு முன்பு இருந்த அரசாங்கங்கள் லாக்கப்டெத்தை நியாயப்படுத்த முயற்சித்தனர். இப்போதைய அரசாங்கம் லாக்கப் டெத் நடந்தால் அதை கண்டிக்கின்றனர். சம்பந்தப்பட்ட காவல்துறைக்குத் தண்டனை தருகின்றனர். காவல்துறையினர் மீது கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வழக்கு நடத்தப்படுகிறது. லாக்கப் டெத் விவகாரத்தில் இப்போதைய அரசின் போக்கு சரியானது.

நெல்லை மாவட்டத்தில் நடந்த கல்குவாரி விபத்து குறித்துப் பேசிய அவர், கல்குவாரிகளுக்கு எப்போதுமே ஆய்வு உண்டு. ஆனால் ஆய்வு செய்பவர்கள் அதை சரியாகச் செய்வதில்லை. இது தான் தவறு, கல்குவாரிகள் முறையாக ஆய்வு செய்யப்பட்டு இருந்தால், இது போன்ற சம்பவங்கள் நடந்து இருக்காது. அதிகாரிகள் இன்னும் கவனமாக இருக்க வேண்டும்" என்றார்.

கல்குவாரிகளை அதிகாரிகள் சரியாக ஆய்வு செய்வதில்லை - கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு!

திருநெல்வேலி மாவட்டம் அடைமிதிப்பான் குளம் கிராமத்தில் இயங்கி வந்த தனியார் கல்குவாரியில் பாறைகள் சரிந்து ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்த நிலையில், கல்குவாரி விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த ஊழியர்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.கே.எஸ்.அழகிரி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

இதையும் படிங்க: குவாரி விபத்து - அதிகாரிகளை தூக்கிலிடுங்கள்! கே.எஸ்.அழகிரி ஆவேசம்

Last Updated : May 17, 2022, 9:35 AM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.