பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் 53 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதை கண்டித்து இன்று வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தவுள்ளதாக தொழிலாளர்கள் சங்கம் அறிவித்திருந்தது.
இதைத் தொடர்ந்து தூத்துக்குடி, மதுரை புறவழிச்சாலையில் அமைந்துள்ள பாரத் பெட்ரோலியம் அலுவலக நுழைவு வாயில் முன்பு சிஜடியு இந்திய தொழிற்சங்க மையத்தின் சார்பில் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது.
பாரத் பெட்ரோலியம் தொழிலாளர்கள் சங்க தலைவர் லெனஷ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசின் முடிவினை எதிர்த்து தொழிலாளர்கள் கோஷங்களை எழுப்பினர்.
இதில் 100க்கும் மேற்பட்ட பாரத் பெட்ரோலியம் நிறுவன தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 10 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் - துபாய் முதலீட்டாளர்கள்!