தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் ஸ்பிக் நகரைச் சேர்ந்தவர் வின்ஸ்டன் அந்தோணி சேவியர் (வயது 31). ஸ்பிக் ஆலையில் மெக்கானிக்கல் இன்ஜினியராக பணிபுரியும் இவர், ஸ்பிக் குடியிருப்பில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், வீட்டை பூட்டிவிட்டு உறவினரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக வின்ஸ்டன் குடும்பத்துடன் சென்றார். வீட்டை பூட்டியவர் சாவியை, அங்கேயே மறைவான இடத்தில் வைத்துவிட்டுச் சென்றார். மறுநாள் மாலை வீடு திரும்பியபோது வீட்டிலிருந்த சுமார் 40 சவரன் நகைகள் திருடு போயிருந்தது தெரியவந்தது.
இது குறித்து வின்ஸ்டன் முத்தையாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் முத்தையாபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் வின்ஸ்டன் வீட்டிற்கு எதிர் வீட்டிலிருந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சிரன்ஜித் மகந்தா (வயது 26) என்பவர் மீது சந்தேகம் எழுந்தது. அவரிடம் காவலர்கள் விசாரணை செய்தததில், அவர் நகைகளை திருடியதும், வீட்டுக்கு வெளிப்புறம் தண்ணீர் வெளியே செல்லும் குழாயினுள் நகைகளை ஒளித்து வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கைது செய்யப்பட்ட சிரன்ஜித் சிறையில் அடைக்கப்பட்டார். மீட்கப்பட்ட 40 சவரன் நகைகளை வின்ஸ்டனிடம் வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு ரூ.25 லட்சம் நிதியளித்த ஜோதிகா