ETV Bharat / state

ஆட்சியர் அலுவலகத்தை ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பினர் முற்றுகை - police

தூத்துக்குடியில் ஜூலை 31ஆம் தேதிக்குப் பிறகு ஸ்டெர்லைட் ஆலை இயங்க அரசு அனுமதிக்கக்கூடாது என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பினர் முற்றுகையிட்டனர்.

கூட்டமைப்பினர் முற்றுகை
கூட்டமைப்பினர் முற்றுகை
author img

By

Published : Jul 19, 2021, 11:29 PM IST

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை ஜூலை 31ஆம் தேதிக்கு பிறகு தொடர்ந்து இயங்க தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்கக்கூடாது என ஒருங்கிணைந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆலைக்கு எதிராக கோஷங்களுடன் பேரணி

சுமார் 200க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக வந்து, ஆலைக்கு எதிராக கோஷங்களை எழுப்பி முற்றுகையிட்டனர். இதைத்தொடர்ந்து, கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு பகுதிகளில் காவல் துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு

மேலும், அலுவலக பிரதான வாயிலில் எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருபவர்கள் கடும் சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை சுற்றி 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டதால் ஆட்சியர் அலுவலக வளாகம் பரபரப்பாக காணப்பட்டது. பின்னர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தடுப்பு வேலிகளை அமைத்து 20 பேரை மட்டும் மாவட்ட ஆட்சியரைச் சந்திக்க காவல் துறையினர் அனுமதியளித்தனர்.

ஆட்சியர் அலுவலகத்தை ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பினர் முற்றுகை

ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு

தொடர்ந்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, பாத்திமா பாபு, வழக்கறிஞர் ஹரி ராகவன், வணிகர் சங்க மாநில துணைத்தலைவர் பழரசம் விநாயகமூர்த்தி, காங்கிரஸ் மாநகர தலைவர் முரளிதரன், மதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் ரமேஷ் உள்ளிட்ட பல்வேறு கட்சி மற்றும் அமைப்புகளைச் சார்ந்த நிர்வாகிகள் உட்பட 20 பேர் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜை சந்திந்து மனு அளித்தனர்.

ஆக்சிஜன் உற்பத்திக்கான காலக்கெடுவை நீட்டிக்க எதிர்ப்பு

பின்னர் இதுகுறித்து அவர்கள் கூறுகையில், "தமிழ்நாட்டில் தற்போது ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லாததால், தமிழ்நாடு அரசால் நிரந்தரமாக மூடப்பட்ட ஸ்டெர்லைட் நச்சு ஆலையிலிருந்து ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதிக்கப்பட்ட உத்தரவை ஜீலை 31ஆம் தேதிக்கு பிறகு நீட்டிக்கக்கூடாது.

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அகற்ற வேண்டும்

முதலமைச்சர் வாக்குறுதி அளித்தபடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அகற்றிட வேண்டும். இதுதொடர்பாக சட்டப்பேரவையில் சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும். தூத்துக்குடி படுகொலைக்கு காரணமான குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை கிடைக்க சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நினைவகம் அமைக்க வேண்டும்

ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்து அரசு பணி கிடைக்காது விடுபட்டவர்கள் அனைவருக்கும் அரசுப் பணி வழங்கிட வேண்டும். போராட்டத்தில் படுகொலையுண்ட 15 தியாகிகளின் நினைவாகத் தூத்துக்குடி மாநகரின் மையப் பகுதியில் நினைவகம் அமைக்க வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: 'மீனவர்களுக்கு எதிராகச் சட்டமா? விடமாட்டோம்' - கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.