ETV Bharat / state

மெல்ல தலைகாட்டுகிறது ஸ்டெர்லைட்...! - complete dismantling Sterlite plant

தூத்துக்குடி: இழுத்து மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை முழுமையாக பிரித்து அகற்ற வேண்டும் என ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை விடுத்தனர்.

ஸ்டெர்லைட்
author img

By

Published : Sep 9, 2019, 7:52 PM IST

Updated : Sep 10, 2019, 1:38 PM IST

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்நிலையில், ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்களும் ஆதரவாளர்களும் மக்கள் குறைதீர் கூட்டத்தில் கலந்துகொண்டு மனு அளிக்க வருவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவல் துறையினர் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. தீவிர சோதனைக்கு பின்னரே பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், இன்று பகல் 12 மணி அளவில் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியவாறு பெருந்திரளாக ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் அவர்களை தடுத்துநிறுத்தி சமாதானம் செய்ய முயற்சித்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர் ஹரி ராகவன்

ஸ்டெர்லைட் எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர் ஹரி ராகவன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், "தூத்துக்குடியில் இயங்கிவந்த ஸ்டெர்லைட் ஆலையை தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்து இழுத்து மூடியது. இதையடுத்து, ஸ்டெர்லைட் நிர்வாகம் தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது‌.

ஆலையை மீண்டும் திறப்பதற்கு ஸ்டெர்லைட் நிர்வாகம் முயற்சிகள் எடுத்துவருகின்றது. இதற்கு மாநகராட்சி அலுவலர்கள், மாவட்ட நிர்வாகமும் துணை போய்க்கொண்டிருக்கின்றார்கள். ஒருபுறம் தமிழ்நாடு அரசு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வழக்குத் தொடுத்துவிட்டு, மறுபுறம் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக செயல்படுவதாக தோன்றுகிறது. எனவே தூத்துக்குடியில் இழுத்து மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை முழுமையாக பிரித்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

முன்னதாக ஆலையை மீண்டும் திறப்பதற்காக ஸ்டெர்லைட் நிர்வாகம் முயற்சிகளை மேற்கொண்டுவருவதாக ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் ஏற்கனவே தெரிவித்திருந்தனர். அதன் காணொலி கீழே...

ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தபோது

Intro:ஸ்டெர்லைட் ஆலை நிறுவனத்தினர் மக்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள் - ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்க சட்ட ஆலோசகர் ஹரிராகவன் பேட்டிBody:
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள் கிழமைகளில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அதுபோல் இன்றும் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இந்நிலையில் மக்கள் குறைதீர் கூட்டத்தில் கலந்துகொண்டு மனு அளிப்பதற்காக ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்களும், ஆதரவாளர்களும் வருவதாக தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக நெல்லை, தூத்துக்குடி மாவட்ட அதிரடிப் படையினர், விரைவு போலீசார் என ஏராளமான போலீஸ் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. தீவிர சோதனைக்கு பின்னரே பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் பகல் 12 மணி அளவில் மடத்தூர், பண்டாரம்பட்டி, குமரெட்டியாபுரம் பகுதியை சேர்ந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பெருந்திரளாக வந்தனர். தொடர்ந்து அவர்கள் கலெக்டர் அலுவலகம் நோக்கி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பியவாறு வந்தனர். அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடுத்து நிறுத்தி சமாதானம் செய்ய முயற்சித்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து
ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளரும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத் சட்ட ஆலோசகருமான வக்கீல் ஹரிஇராகவன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்

தூத்துக்குடியில் இயங்கிவந்த ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு அரசாணை பிறப்பித்து இழுத்து மூடியது. இதை தொடர்ந்து ஸ்டெர்லைட் நிர்வாகம் தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது‌. இதில் தமிழக அரசு தரப்பிலும் வாதங்கள் எடுத்து வைக்கப்படுகின்றன. இந்த நிலையில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை சார்பில் நிதி உதவிகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதன் மூலமாக ஆலையை மீண்டும் திறப்பதற்கு அவர்கள் முயற்சிகள் எடுத்து வருகின்றனர். இதற்கு மாநகராட்சி அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகமும் துணை போய்க்கொண்டிருக்கிறது. ஒருபுறம் தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வழக்குத் தொடுத்து விட்டு மறுபுறம் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக செயல்படுவதாக தோன்றுகிறது. ஸ்டெர்லைட் ஆலை மக்கள் நலத்திட்டங்களும், நிதி உதவிகளை செய்வதாக கூறி ஒற்றுமையாக இருக்கும் ஊர் மக்களிடையே பிரிவினையை உண்டாக்க முயற்சிக்கிறார்கள். எனவே தூத்துக்குடியில் இழுத்து மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை முழுமையாக பிரித்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆலை சார்பில் அளிக்கப்படும் நிதி உதவிகளையும் தடுத்து நிறுத்த வேண்டும் என்றார்.

பேட்டி: ஹரிராகவன், வெள்ளத்தாய்.Conclusion:
Last Updated : Sep 10, 2019, 1:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.