வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் கடந்த இரண்டு தினங்களாக நல்ல மழை பெய்து வருகிறது. ஏற்கனவே கடந்த ஒரு மாதமாக வடகிழக்கு பருவமழை பெய்தது. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் மணிமுத்தாறு, சேர்வலாறு ஆகிய அணைகள் நிரம்பியுள்ளன.
தற்போது பெய்துவரும் மழையின் காரணமாக மணிமுத்தாறு அணையிலிருந்து நீர் திறந்து விடப்பட்டதால், தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் தாழ்வான பகுதியில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
தொடர் மழையின் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் அணையிலிருந்து மணிக்கு 6 ஆயிரத்து 500 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
இந்த அணையில் இருந்து உபரி நீர் வெளியேறுவதை தடுக்கும் வகையில், நீர் சேமிப்புக்கான திட்டங்களை அரசு மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: திண்டிவனம் ஏரிக்கரை உடைப்பு... குடியிருப்பில் புகுந்த வெள்ள நீர்!