தூத்துக்குடி அருகே அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலானது கடற்கரை அருகில் அமைந்துள்ளது. மேலும், சிறந்த பரிகார ஸ்தலமாக விளங்கி வருகிறது.
இந்தக் கோயிலில் திருவிழா காலங்கள் தவிர்த்து நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் அரையாண்டு தேர்வு விடுமுறை மற்றும் மார்கழி மாதம் என்பதால் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து பக்தர்கள் கோயிலில் குவிந்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. 1:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 3 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. நேற்று மாலை முதலே லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலில் குவிந்தனர்.
இன்று அதிகாலை 1 மணியிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி, சுமார் 6 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதனால் கோயில் வளாகம் திருவிழா போல் காட்சியளித்து வருகிறது.
இதையும் படிங்க:Video:புத்தாண்டு: திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஏழுமலையான் தரிசனம்