தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பகுதியில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜின் ஏற்பாட்டின் பேரில் டிஎன்பிஎஸ்சி, ரயில்வே, வங்கி, டெட், யுபிஎஸ்சி உள்ளிட்ட பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வழங்கும் விதமாக பயிற்சி மையம் திறப்பு விழா நடைபெற்றது.
ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், சிறப்பு விருந்தினராக மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் கலந்து கொண்டு பயிற்சி அகாடமியை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அப்போது பேசிய மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன், "நான் உங்களைப் போல இந்த இருக்கையில் இருந்த போது ஒரு நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ஒருவர் சைரன் வைத்த காரில் வந்து இறங்கினார்.
அப்போது நானும் இதே போல் வரவேண்டும் என எண்ணினேன். தற்போது இன்று அதே போல் வந்திறங்கி உள்ளேன். அதேபோல நீங்களும் விடாமுயற்சியுடன் படித்தால் இது போல் ஆகலாம். மாணவ பருவத்தில் மாணவர்கள் எவரும் எந்த ஒரு விவகாரத்திலும் தலையிடாமல் வழக்குகள் பெறாமல் இருக்க வேண்டும்.
நான் பொண்ணுங்க பின்னாடிலாம் சுற்றல.! லவ் வெல்லாம் பண்ணல.! அதனாலதான் இன்னைக்கு எஸ்பியாக இருக்கேன்" என்று கூறி, போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுகு வாழ்த்துகளை தெரிவித்தார்.
இதையும் படிங்க: Parliament Special Session : மகளிர் இடஒதுக்கீடு மசோதா! மக்களவையில் என்ன நடக்கப்போகுது?