ETV Bharat / state

தூத்துக்குடி-மைசூர் இடையேயான சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு!

மதுரை: தூத்துக்குடி - மைசூர் இடையேயான சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

தூத்துக்குடி-மைசூர் இடையேயான சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

author img

By

Published : Dec 22, 2020, 8:06 AM IST

தூத்துக்குடி மைசூர் இடையேயான சிறப்பு ரயில் சேவை, அண்மையில் தென்னக ரயில்வேயால் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதன் சேவை வரும் ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

தென் மாவட்ட பயணிகளுக்கு வரப்பிரசாதம்

மைசூர் - தூத்துக்குடி இடையேயான சிறப்பு ரயில், டிசம்பர் 31 வரையும், தூத்துக்குடி - மைசூர் இடையேயான சிறப்பு ரயில் ஜனவரி 01 வரையும் இயக்கப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

தற்போது பயணிகளின் வசதிக்காக, மைசூர் - தூத்துக்குடி இடையேயான சிறப்பு ரயில் ஜனவரி 01 முதல் 30 வரையும், தூத்துக்குடி - மைசூர் இடையேயான சிறப்பு ரயில் ஜனவரி 02 முதல் ஜனவரி 31 வரையும் சேவை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

சிறப்பு ரயில்கள் நேர அட்டவணை மாற்றம்

நாளை (டிச.23) முதல் மைசூர் - தூத்துக்குடி - மைசூர் இடையேயான சிறப்பு ரயில்களில் கால அட்டவணையில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி மைசூர் - தூத்துக்குடி இடையேயான சிறப்பு ரயில் திண்டுக்கல்லில் இருந்து, காலை 06:30 மணிக்குப் பதிலாக 06.35 மணிக்கும், மதுரையிலிருந்து காலை 07:35 மணிக்குப் பதிலாக 07.50 மணிக்கும், விருதுநகரிலிருந்து காலை 08.25 மணிக்குப் பதிலாக 08.40 மணிக்கும், கோவில்பட்டியிலிருந்து காலை 09:10 மணிக்குப் பதிலாக 09.25 மணிக்கும், வாஞ்சி மணியாச்சியிலிருந்து காலை 10.05 மணிக்குப் பதிலாக 10.00 மணிக்கும் புறப்பட்டு, முற்பகல் 11.15 மணிக்குப் பதிலாக முற்பகல் 11.10 மணிக்கு தூத்துக்குடி சென்று சேரும்.

தூத்துக்குடி-மைசூர் இடையேயான சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு
தூத்துக்குடி-மைசூர் இடையேயான சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு
மறுமார்க்கத்தில் தூத்துக்குடி - மைசூர் இடையேயான சிறப்பு ரயில் தூத்துக்குடியில் இருந்து மாலை 04.25 மணிக்குப் பதிலாக 04.30 மணிக்கும், வாஞ்சி மணியாச்சியில் இருந்து மாலை 05.07 மணிக்குப் பதிலாக 05.02 மணிக்கும், கோவில்பட்டியிலிருந்து மாலை 05.45 மணிக்குப் பதிலாக 05.35 மணிக்கும், விருதுநகரிலிருந்து மாலை 06.30 மணிக்குப் பதிலாக 06.35 மணிக்கும், மதுரையிலிருந்து இரவு 07.45 மணிக்குப் பதிலாக 07.50 மணிக்கு புறப்பட்டு, பின்பு திண்டுக்கல்லில் இருந்து இரவு 09.15 மணிக்குப் பதிலாக 09.10 மணிக்கு புறப்படும் என, தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

தூத்துக்குடி மைசூர் இடையேயான சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு தென்மாவட்ட பயணிகளுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி மட்டுமின்றி வரப்பிரசாதமாகும்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.