ETV Bharat / state

தாயாருக்காக கோயில் எழுப்பிய பிள்ளைகள்.. திருச்செந்தூரில் நெகிழ்ச்சி! - Annai Subbulakshmi temple kurinji nagar

திருச்செந்தூரில் தாயாருக்கு மகன், மகள் கோயில் எழுப்பிய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தாயாருக்காக கோயில் எழுப்பிய பிள்ளைகள்.. திருச்செந்தூரில் நிகழ்ச்சி!

author img

By

Published : Apr 25, 2023, 4:33 PM IST

திருச்செந்தூரில் தாயாருக்கு மகன், மகள் கோயில் எழுப்பிய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

தூத்துக்குடி: பெற்றோர், உறவினர்கள் எவரேனும் உயிரிழந்தால், கல்லறை கட்டும் வழக்கம் இருந்து வருகிறது. இந்த நிலை, தற்போது கோயிலாகவோ அல்லது உயிரிழந்தவர்களின் சிலையாகவோ வைக்கும் அளவிற்கு மாற்றம் அடைந்து வருகிறது. அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரைச் சேர்ந்தவர்கள் கல்யாண குமார் - சுப்புலட்சுமி தம்பதி. இவர்களுக்கு ஜெய்சங்கரி (32) மற்றும் ராகவேந்திரா (26) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இதில், சுப்புலட்சுமி என்பவர், கடந்த 2021ஆம் ஆண்டு, மே 14ஆம் தேதி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இதனையடுத்து உயிரிழந்த தனது தாயாருக்காக கோயில் எழுப்ப அவரது பிள்ளைகள் முடிவு செய்துள்ளனர். இதற்காக வீரபாண்டியன்பட்டினம் குறிஞ்சி நகரில் ‘சுப்புலட்சுமி’ என்ற ஒரு கார்டனை உருவாக்கி, அதில் தனது தாய் சுப்புலட்சுமியின் அஸ்தியை வைத்து, சுமார் 3 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ‘அன்னை சுப்புலட்சுமி’ என்ற பெயரில் கோயில் கட்டி உள்ளனர்.

மேலும், இந்த கோயிலில் சுப லிங்கேஸ்வரர் என்ற சிவலிங்கத்தையும், ராஜகணபதி விநாயகரையும் பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் நடத்தி உள்ளனர். இதனையடுத்து அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உயிரிழந்த சுப்புலட்சுமியின் கணவர் கல்யாண குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், “நான் தற்போது தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறேன். ஆத்தூரைச் சேர்ந்த சுப்புலட்சுமியை 1988ஆம் ஆண்டு திருமணம் செய்தேன்.

சுப்புலட்சுமியோடு 32 ஆண்டுகள் இல்லற வாழ்வை நடத்தினேன். கரோனா தொற்றால் சுப்புலட்சுமி இறந்த அன்றே, அவரது அஸ்தியை எடுத்துக் கொண்டு, அவரது நினைவாக கோயில் கட்ட வேண்டும் என எனது பிள்ளைகள் சபதம் எடுத்துக் கொண்டனர். இதன் விளைவாகத்தான் தற்போது சுப்புலட்சுமி நினைவாலயம் எழுப்பி உள்ளோம்” என கூறினார்.

அதேபோல், அவரது மகன் ராகவேந்திரா கூறுகையில், “எங்களது குடும்பத்திற்கு அஸ்திவாரமாக இருந்தது எனது அம்மா தான். கரோனா என்ற கொடிய நோய் காரணமாக, எங்களது அம்மா எங்களை விட்டுச்சென்றார். எனது சந்ததியினருக்கும் குலதெய்வமாக எனது அம்மா இருக்க வேண்டும் என்ற எண்ணத்தால், இந்த கோயிலை நிறுவி உள்ளோம். அதேபோல், ‘சுப்புலட்சுமி அறக்கட்டளை’ என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றை உருவாக்கி, திருச்செந்தூர் பகுதி மக்களுக்கு கல்வி மற்றும் சேவைகளை வழங்க வேண்டும் என்பதும் எங்களது விருப்பமாக உள்ளது” என்றார்.

முன்னதாக, வேலூர் மாவட்டத்தில், தனது தாய் மற்றும் தந்தையரை சிலையாகவே வடிவமைத்து, அவர்களின் சிலைகளுக்கு முன்னே சிவலிங்கத்தையும் வைத்திருந்தார், அவரது மகன். இவ்வாறு தாய் - தந்தையருக்கு சிலை எழுப்பிய அவரது மகனும் உயிரிழக்கவே, தற்போது இந்த சிலைகள் உள்ள கோயிலை, அவர்களது மருமகள் கவனித்து வருகிறார்.

மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் உயிரிழந்த தனது தந்தையின் சிலையை கோயிலாக எழுப்பி, கருவறையில் சிவலிங்கத்தையும், கருவறைக்கு வெளியே தனது தந்தையின் சிலையையும் வைத்து நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளனர், அவரது மகன்கள்.

இதையும் படிங்க: ''தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்'' - சிவன் கோயில் கட்டி, அதில் தந்தைக்கு சிலை வைத்த மகன்கள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.