ETV Bharat / state

'திமுக கூட்டணிக் கட்சிகளில், சில எங்களுடன் இணைய வாய்ப்பு' - பொடி வைத்துப்பேசும் கடம்பூர் ராஜூ! - அமைச்சர் கடம்பூர் ராஜூ

தூத்துக்குடி: திமுக கூட்டணிக்குள் சலசலப்பு நிலவுகிறது என்றும்; அதனால் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

minister kadambur raju
author img

By

Published : Nov 19, 2019, 10:56 AM IST

Updated : Nov 19, 2019, 12:47 PM IST

தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவுச் சங்கங்களின் 66ஆவது கூட்டுறவு வார விழா, தூத்துக்குடியில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவுச் சங்கங்களின் தலைவர் சுதாகர் தலைமை தாங்கினார்.

இதில், தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு சங்கங்கள், கூட்டுறவு அமைப்புகளுக்கு கேடயங்களை வழங்கிப் பாராட்டினார். நிகழ்ச்சியில் 957 பயனாளிகளுக்கு ரூ.6 கோடியே 21 லட்சம் கடன் உதவிகள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து விழாவில் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, ''தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கூட்டுறவு வங்கிகள் மூலமாக கடந்த 8 ஆண்டுகளில் பயிர்க்கடனாக ஒரு லட்சம் விவசாயிகளுக்கு 740 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளன. நடப்பாண்டில் மட்டும் 75 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாட்டில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். அதிமுக தலைமையில் வெற்றிடம் என்ற பேச்சுக்கே இடமில்லை. அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் நீடித்ததாகச் சரித்திரம் இல்லை.

திமுக தேர்தலைக் கண்டு பயப்படுகிறது. அதன் காரணமாகவே திமுகவினர் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளிக்கின்றனர். தமிழ்நாட்டில் சிறந்த கட்சியாக அதிமுக செயல்பட்டு வருகிறது. திமுக கூட்டணியில் சலசலப்பு உள்ளது. எனவே, வரும் உள்ளாட்சித் தேர்தலில் அங்குள்ள கட்சிகள் அதிமுக கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளது" என்றார்.

உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளில், சில எங்கள் கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளது - கடம்பூர் ராஜூ

இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட கூடுதல் ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன், மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் சுதாகர், கூட்டுறவு துணை பதிவாளர் பிரியதர்ஷினி, சட்டமன்ற உறுப்பினர்கள் சண்முகநாதன், சின்னப்பன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: சாலையில் பறந்தது தனது பணம் என நினைத்து ரூ. 3 லட்சத்தை தவற விட்ட விவசாயி

Intro:உள்ளாட்சித் தேர்தலில், திமுக கூட்டணியில் உள்ள சில கட்சிகள் அதிமுக கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது - தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ. ராஜு பேட்டி.
Body:
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் 66 வது கூட்டுறவு வார விழா தூத்துக்குடியில் தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் தலைவர் சுதாகர் தலைமை தாங்கினார்.

இதில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
கூட்டுறவு சங்க வார விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவு வங்கிகள்,கூட்டுறவு சங்கங்கள், கூட்டுறவு அமைப்புகளுக்கு கேடயங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் 957 பயனாளிகளுக்கு 6 கோடியே 21 லட்சம் ரூபாய் கடன் உதவிகளை வழங்கப்பட்டது.

தொடர்ந்து விழாவில் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ,
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கூட்டுறவு வங்கிகள் மூலமாக கடந்த 8 ஆண்டுகளில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு 740 கோடி ரூபாய் பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளன. நடப்பாண்டில் 75 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளன. கூட்டுறவு வங்கிகளில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள பிரதமர் ஜன் தன் யோஜனா உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. விவசாயிகள், மகளிர், பொருளாதாரத்தில் நலிவுற்றவர்கள் என அனைத்து மக்களுக்கும் ஏற்ற திட்டங்களை தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் செய்து வருகிறது‌. இதனால் கூட்டுறவுத்துறையில் தொடர்ந்து தமிழகம் முன்னிலையில் இருந்து வருகிறது. அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து நலத்திட்ட உதவிகளை வழங்குவதில் கூட்டுறவு துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது என பேசினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்,
தமிழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். அதிமுக தலைமையில் வெற்றிடம் என்ற பேச்சுக்கே இடமில்லை. அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் நீடித்ததாக சரித்திரம் இல்லை. திமுக தேர்தலை கண்டு பயப்படுகிறது. அதன் காரணமாகவே அதிமுக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது புகார் அளிக்கின்றனர். தமிழகத்தில் சிறந்த கட்சியாக அதிமுக செயல்பட்டு வருகிறது. நான்குநேரி,விக்கிரவாண்டி தொகுதியில் வெற்றி பதிவான வாக்குகளில் 60 சதவீதம் வாக்குகளை பெற்றுள்ள கட்சி அதிமுக. திமுக கூட்டணியில் சலசலப்பு உள்ளது. எனவே வரும் உள்ளாட்சி தேர்தலில் அங்குள்ள கட்சிகள் அதிமுக கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளது என்றார்.

முன்னதாக நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட கூடுதல் ஆட்சித்தலைவர் விஷ்னு சந்திரன், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், கூட்டுறவு துணை பதிவாளர் பிரியதர்ஷினி, சட்டமன்ற உறுப்பினர்கள் சண்முகநாதன், சின்னப்பன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.Conclusion:
Last Updated : Nov 19, 2019, 12:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.