ETV Bharat / state

கண்மாயில் குளிக்கச் சென்ற அக்கா-தங்கை உயிரிழப்பு

தூத்துக்குடி: கண்மாயில் குளிக்க சென்ற சகோதரிகள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

thootukudi
கண்மாயில் குளிக்கச் சென்ற அக்கா-தங்கை உயிரிழப்பு
author img

By

Published : Mar 25, 2021, 5:58 AM IST

தூத்துக்குடி மாவட்டம், கோமஸ்புரம் அருகேயுள்ள ராஜீவ் காந்திநகர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் போஸ் இமானுவேலொ. இவரது மகள்கள் சஞ்சனா (வயது 14), சப்ரினா (10). இருவரும் தோழிகளுடன் அருகிலுள்ள துப்பாஸ்பட்டி கண்மாய்க்கு குளிக்கச் சென்றுள்ளனர். கண்மாயில் குளித்து முடித்து விட்டு சிறுமிகள் அனைவரும் வெளியேறிய நிலையில், சஞ்சனா, சப்ரினா ஆகிய இருவரையும் காணவில்லை. பின்னர் அவர்கள் இருவரும் நீரில் மூழ்கியது தெரியவந்தது.

இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவலின் அளித்ததின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், தாளமுத்து நகர் காவல் துறையினர், தீயனைப்பு துறையினர் சிறுமிகளின் உடல்களை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்விக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து தாளமுத்து நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: கிணற்றில் நீச்சல் பழகிக்கொண்டிருந்த பள்ளி மாணவன் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.