தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக ஓட்டப்பிடாரம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை சண்முகையா எம்.எல்.ஏ. இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். வீடுகளுக்குள் புகுந்து நிற்கும் மழை நீரை வெளியேற்றுவதற்கு உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
மேலும், ஸ்டேட் பாங்க் காலனி, கேடிசி நகர், ரஹ்மத் நகர், முத்தம்மாள் காலனி உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து இருக்கும் தண்ணீரை வெளியேற்றுவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடமும், மாநகராட்சி ஆணையாளரிடமும் கோரிக்கை விடுத்தோம். இதுதொடர்பாக தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழியும் வேண்டுகோள் விடுத்தார்.
ஆனால் அலுவலர்கள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே பொதுமக்களின் நலன் கருதி அவர்களின் பாதுகாப்புக்காக நீதிமன்றம் சென்று இதற்கு தீர்வு காண முடிவு செய்துள்ளோம். மழை வெள்ளம் சூழ்ந்த இடங்களில் சுகாதார கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் உடனடியாக சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும். மேலும் கொசு புழுக்களை அழிப்பதற்கும், மழை நீரை வெளியேற்றுவதற்கும் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதையும் படிங்க:
குளிரில் நடுங்கி உயிரிழந்த மூதாட்டி; ஈமசடங்கிற்கு வேறு இடத்துக்கு தூக்கிச்சென்ற அவலம்!