ETV Bharat / state

'காங்., பாஜக அகில இந்திய கட்சிகள்தான்; நாம் தமிழர் கட்சி அகில உலக கட்சி' - தேர்தல்2019

தூத்துக்குடி: காங்கிரஸ், பாஜக அகில இந்திய கட்சிகள்தான்; ஆனால் நாங்கள் அகில உலக கட்சி என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சீமான்
author img

By

Published : Apr 7, 2019, 8:41 AM IST

தூத்துக்குடி மக்களவைத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கிறிஸ்டண்டைன் ராஜசேகர், விளாத்திகுளம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் காளிதாஸ் ஆகியோரை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டார்.

சீமான்

அப்போது சீமான் பேசியதாவது: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அமைதியாக பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்றபோது துப்பாக்கிச் சூடு நடத்தியது ஏன்? இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் பதில் தெரிவிக்கும்போது துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து தொலைக்காட்சியை பார்த்துதான் நான் அறிந்து கொண்டேன் என்று சொல்கிறார்.

மக்கள் சிந்திய ரத்தத்திற்கும் வடிந்த கண்ணீருக்கும் மக்கள் விடைதேடக்கூடிய காலம் இது. விவசாயிகள் கடனாளிகளானது காங்கிரஸ் - திமுக ஆட்சியில்தான். காங்கிரஸ் கூட்டணியும், பாஜக கூட்டணியும் வாக்குக்காக நிற்கிறார்கள். நாங்கள் நாட்டுக்காக நிற்கிறோம்.

நாம் தமிழர் கட்சி ஆட்சி அமையும்போது நெய்தல் படையை அமைப்பேன். நெய்தல் படையில் வீரர்கள் தேர்வு என்பது மீனவர்கள் மட்டும்தான். அதற்கான தகுதி படகோட்டவும், நீச்சல் மட்டும் தெரிந்திருந்தால் போதும்.

காங்கிரஸ், பாஜக அகில இந்திய கட்சிகள்தான்; ஆனால் நாங்கள் அகில உலக கட்சி. எங்கள் தத்துவம் யாரோடும் சேராது.

எங்களின் ஆட்சியில் பெட்டி பின்னுதல், பட்டுப்பூச்சு வளர்ப்பு, வேளாண்மை, விவசாயம் எல்லாம் அரசு வேலையாக மாற்றப்படும். மீனவர்களுக்கென்று தனி வைப்பகம் உருவாக்கப்படும். இந்தியாவில் ஒற்றை கட்சி ஆட்சி முறையை ஒழிப்போம்.

தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 40 தொகுதியில் ஐந்து தொகுதிகளில் இஸ்லாமியர்களுக்கு கொடுத்துள்ளோம். ஆனால் திமுகவினர் ஒரு தொகுதியை கூட இஸ்லாமியருக்கு கொடுக்கவில்லை. தண்ணீரில் வேண்டுமானால் தாமரை மலரலாம்; தமிழனின் கண்ணீரில் மலராது. குளத்தில் வேண்டுமானால் தாமரை மலரலாம். எங்கள் தமிழ் நிலத்தில் மலராது.

தேர்தல் ஆணையத்திடம் காளைமாட்டை சின்னமாக கேட்டோம். ஆனால் உயிரோடு இருப்பதை சின்னமாக தர மறுத்துவிட்டனர். ஆனால் விவசாயியை சின்னமாக கொடுத்துள்ளனர்.

அவர்களே இந்நாட்டில் விவசாயி உயிருடன் இல்லை என முடிவு செய்துவிட்டனர். ஆகவே விவசாயியை வாழவைக்க கைநீட்டி வாக்கு கேட்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கிறிஸ்டன்டைன் ராஜசேகர் மற்றும் விளாத்திக்குளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் காளிதாஸ் ஆகியோரை ஆதரித்து நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்ட தேர்தல் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் பேசிய சீமான்,

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அமைதியாக பொதுமக்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் சென்றபோது துப்பாக்கி சூடு நடத்தியது ஏன்?. இதுகுறித்து தமிழக முதல்வர் பதில் தெரிவிக்கும்போது துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து டிவியை பார்த்து தான் நான் அறிந்து கொண்டேன் என்று சொல்கிறார். அப்படியொனில் துப்பாக்கி சூடு நடத்த உத்தரவு எங்கிருந்து வந்தது?. மேலும் தூத்துக்குடி மக்களுக்கு பச்சை துரோகம் செய்தது இந்த அரசு. மக்கள் சிந்திய ரத்தத்திற்கும் வடிந்த கண்ணீருக்கும் மக்கள் விடைதேட கூடிய காலம் இது.

விவசாயிகள் கடனாளிகளானது காங்கிரஸ் - திமுக ஆட்சியில் தான்.
பணமதிப்பிழப்பு மூலம் 50 நாளில் நாடு சொர்க்கத்திற்குப் போகும் என்று பிரதமர் கூறினார் ஆனால் மக்கள் தான் செத்து சொர்கத்துக்கு போனார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தரமான கல்வி, குடிநீர் இலவசம். அனைவருக்கும் சமமான மருத்துவம் அளிக்கப்படும்.

வாக்கு என்பது பொருள் விற்பனை செய்யும் சந்தை அல்ல. காற்று, நிலம்,நீர், பறவைகள் பூச்சிகள், குருவிகள் என அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டும் ஆனால் புவிசார் சுழற்சியை பற்றி எந்த அரசியல் வாதியும் பேசுவதில்லை. இன்றைக்கு பூமியின் ஈரகொலையை அறுத்தெடுக்கும் திட்டங்களாக ஸ்டெர்லைட், ஈதேன், மீத்தேன், நியூட்ரினோ திட்டத்தை கொண்டு வந்துள்ளனர். காங்கிரஸ் கூட்டணியும், பாஜக கூட்டணியும் ஓட்டுக்காக நிற்கிறார்கள். நாங்கள் நாட்டுக்காக நிற்கிறோம்.

நாம் தமிழர் கட்சி ஆட்சி அமையும் போது நெய்தல் படையை அமைபேன்.
நெய்தல் படையில் வீரர்கள் தேர்வு  என்பது மீனவர்கள் மட்டும் தான். அதற்கான தகுதி படகோட்டவும், நீச்சல் மட்டும் தெரிந்திருந்தால் போதும்.

தமிழகத்தை ஓட்டுக்கு காசு கொடுக்கமல் ஓட்டு வாங்க முடியாது என்ற நிலைக்கு மாற்றி விட்டார்கள். 5 ஆண்டுகால ஆட்சியின் சாதனையை சொல்லி கேட்பதற்கு இவர்களிடம் ஒன்றும் இல்லை. காங்கிரஸ், பாஜக அகில இந்திய கட்சிகள் தான். ஆனால்
நாங்கள் அகில உலக கட்சி. எங்கள் தத்துவம் யாரோடும் சேர வேண்டும் முடியாது.

எங்களின் ஆட்சியில் பெட்டி பின்னுதல், பட்டுபூச்சு வளர்ப்பு, வேளாண்மை, விவசாயம் எல்லாம் அரசு வேலையாக மாற்றப்படும். மீனவர்களுக்கென்று தனி வைப்பகம் உருவாக்கப்படும்.

தமிழகம், புதுச்சேரி உள்பட 40 தொகுதியில் 5 தொகுதியில் இஸ்லாமியர்களுக்கு கொடுத்துள்ளோம். ஆனால் திமுகவினர் 1 தொகுதியை கூட இஸ்லாமியருக்கு கொடுக்க  வில்லை.
இந்தியாவில் ஒற்றை கட்சி ஆட்சி முறையை ஒழிப்போம். இந்தியா என்பதை ஒரு பன்னாட்டு சந்தையாக மாற்றி அதில் அவர்கள் விற்கும் பொருளை வாங்கும் மந்தையாக நம்மை மாற்றி விட்டனர் இந்த அரசியல்வாதிகள். இதில் அரசின் வேலை சாராய கடை நடத்துவதே.

தண்ணீரில் வேண்டுமானால் தாமரை மலரலாம். தமிழனின் கண்ணீரில் மலராது. குளத்தில் வேண்டுமானால் தாமரை மலரலாம். எங்கள் தமிழ் நிலத்தில் மலரது. மதமும், சாதியும் வைத்து அரசியல் செய்கின்றனர். மண்புழு கூட மனித வாழ்க்கைக்கு பயன்படும். ஆனால் மதமும், சாதியும் பயன்படாது.

தேர்தல் ஆணையத்திடம் காளைமாட்டை சின்னமாக கேட்டோம். ஆனால் ஊரோடு இருப்பதை சின்னமாக தர மறுத்துவிட்டனர். ஆனால் விவசாயை சின்னமாக கொடுத்துள்ளார். அவர்களே இந்நாட்டில்  விவசாயி உயிருடன் இல்லை என முடிவு செய்து விட்டனர் போல. ஆகவே விவசாயியை வாழ வைக்க கைநீட்டி ஓட்டு கேட்கிறோம்.

நாங்கள் ஆட்சி மாற்றத்துக்கு வரவேண்டும் என நினைக்கவில்லை. அடிப்படை அரசியலை கட்டமைப்பை புரட்டிபோட வாய்ப்பு கேட்கிறோம் எனக்கூறினார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.