தூத்துக்குடி மாவட்டம் லூர்தம்மாள்புரத்தில் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளைப் பதுக்கி வைத்துள்ளதாகத் தருவை கடலோர காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், தனியார் குடோனில் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில், வெளிநாட்டிற்குக் கடத்த தயாராக இருந்த பத்து லட்சம் மதிப்பிலான கடல் அட்டைகளைப் பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தலுக்குப் பயன்படுத்திய மினி லாரி மற்றும் பதப்படுத்த பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இது தொடர்பாக லூர்தம்மாள்புரத்தை சேர்ந்த கமார்தீன் மகன் மீராசா (40), திரேஸ்புரம் மாதவன் நாயகர் காலணியைச் சேர்ந்த ஜோசப் மகன் அந்தோணி ராஜ் (41), ஆகிய இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், இதுதொடர்பாக இரண்டு பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.