தூத்துக்குடி, சாத்தான்குளத்தில் காவல் துறையினரின் தாக்குதலில் உயிரிழந்த தந்தை, மகனின் வழக்கு சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சாத்தான்குளத்தில் மூன்று குழுக்களாக சிபிசிஐடி காவல் துறையினர் இன்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், அவர்கள் ஜெயராஜ் கடை அருகே உள்ள கடைகள், அவரின் உறவினர்கள், பொதுமக்கள், சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், நண்பர்கள், மற்றும் ஜெயராஜ், பென்னிக்ஸின் ரத்தக்கரை படிந்த ஆதாரங்கள் உள்ள காவல் நிலையம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஜெயராஜ், பென்னிக்ஸ் இறப்பு தொடர்பான சம்பவத்தை நேரில் விசாரணை நடத்திட சிபிசிஐடி ஐஜி சங்கர், காவல்துறை சூப்பிரண்டு விஜயகுமார் ஆகியோர் தூத்துக்குடிக்கு வந்துள்ளனர். இவர்கள் தற்போது தனியார் ஹோட்டல் ஒன்றில் முகாமிட்டு வழக்கு குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: சாத்தான்குளம் விவகாரம்; மனு அளிக்க வந்த வணிகர்களிடம் வருத்தம் தெரிவித்த காவல் துறையினர்