தூத்துக்குடி: கிருஷ்ணராஜபுரத்தைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (வயது 65). மரம் வெட்டும் தொழிலாளி. இவருடைய நண்பர் பனையூரை சேர்ந்த இசக்கிமுத்து, பனையேறும் தொழிலாளி.
மது போதை
நாள்தேறும் இருவரும் காலையில் வேலைக்குச் சென்றுவிட்டு மாலையில் ஒன்றாக மது அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நிலையில் இன்று(ஆக.7) மாலை சாமுவேல்புரத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் இருவரும் ஒன்றாக மது அருந்திய போது அவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.
அரிவாள் வெட்டு
இசக்கிமுத்து செல்போனை முத்துகிருஷ்ணன் பிடுங்கியதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்குள் தகராறு முற்றி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் ஆத்திரமடைந்த இசக்கிமுத்து தான் இடுப்பில் வைத்திருந்த அரிவாளால் முத்துக்கிருஷ்ணனை தலையில் வெட்டியுள்ளார்.
பதிலுக்கு முத்துக்கிருஷ்ணன் தாக்கியதில் இசக்கிக்கு பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. முத்துக்கிருஷ்ணன் நிலைகுலைந்து மயங்கி விழுந்துள்ளார்.
இசக்கிமுத்து தலைமறைவு
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் தூத்துக்குடி தாளமுத்துநகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் முத்துகிருஷ்ணனை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் தலைமறைவான இசக்கிமுத்துவை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: சிறுமிக்கு பாலியல் வன்புணர்வு - போக்சோவில் ஒருவர் கைது