ETV Bharat / state

உற்பத்தி குறைவால் தூத்துக்குடியில் அதிகரித்துள்ள உப்பு விலை..!

தூத்துக்குடி: குஜராத் மாநிலத்திலிருந்து தூத்துக்குடிக்கு கப்பல் மூலம் 27,500 டன் உப்பு வந்துள்ளதால் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பின் விலை குறையும் என உற்பத்தியாளர்கள் கவலையடைந்துள்ளனர்.

தூத்துக்குடி உப்பு உற்பத்தி செய்யும் பகுதி
author img

By

Published : Nov 17, 2019, 2:54 AM IST

நாட்டின் உப்பு உற்பத்தியில் குஜராத் மாநிலத்துக்கு அடுத்தப்படியாக இரண்டாவது இடத்தில் தூத்துக்குடி மாவட்டம் உள்ளது. இங்கு ஆண்டுக்கு சராசரியாக 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்நிலையில் இந்தாண்டு பல்வேறு சூழ்நிலைகளால் 60 சதவீதம் (15 லட்சம் டன்) மட்டுமே உப்பு உற்பத்தியாகியுள்ளது. இதில் 10 லட்சம் டன் உப்பு ஏற்கனவே விற்பனையாகிவிட்டது. தற்போது சுமார் 5 லட்சம் டன் அளவுக்கு உப்பளங்களில் கையிருப்பு உள்ளது.

மழைக்காலம் தொடங்கியிருப்பதால் உப்பின் விலை அதிகரித்துள்ளது. தூத்துக்குடியில் உற்பத்தியாகும் உப்பானது டன்னுக்கு ரூபாய் ஆயிரத்து 400 முதல் ஆயிரத்து 500 வரை விலை போகிறது. இதனால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தூத்துக்குடி உப்பு உற்பத்தி செய்யும் பகுதி

இந்நிலையில், தனியார் நிறுவனம் ஒன்று குஜராத் மாநிலத்திலிருந்து 27,500 டன் உப்பை தூத்துக்குடிக்கு கப்பல் மூலம் நேற்று தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் கொண்டு வரப்பட்டது. இதில் 15 ஆயிரம் டன் உப்பு மேட்டூரில் உள்ள கெம்பிளாஸ்ட் நிறுவனத்துக்கு கொண்டு செல்லப்படுவதாகவும், மீதமுள்ள உப்பை தூத்துக்குடியிலேயே சேமித்து வைக்கவும் அந்நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. பிரீ புளோ உப்பு தயாரிப்பதற்காக குஜராத் உப்பை பயன்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தூத்துக்குடியில் உப்பு விலை உயர்ந்துள்ள நிலையில், தனியார் நிறுவனம் குஜராத்திலிருந்து கப்பல் மூலம் உப்பை குறைந்த விலைக்கு வாங்கி வந்துள்ளது. தொடர்ந்து இதேபோல் குஜராத்தில் இருந்து உப்பு வருமானால், தூத்துக்குடியில் உற்பத்தி செய்யப்பட்டு சேமித்து வைக்கப்பட்டுள்ள உப்பின் விலை குறைய வாய்ப்புள்ளதாக உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க : கொடைக்கனல் உருளைக் கிழங்கு விலை திடீர் வீழ்ச்சி!

Intro:தூத்துக்குடியில் உப்பு விலை உயர்வு - விலையை குறைக்க குஜராத்திலிருந்து 27,500 டன் உப்பு கப்பல் மூலம் வருகைBody:

தூத்துக்குடி

குஜராத் மாநிலத்தில் இருந்து தூத்துக்குடிக்கு கப்பல் மூலம் 27,500 டன் உப்பு வந்துள்ளது. இதனால் இங்குள்ள உப்பின் விலை குறையும் என உப்பு உற்பத்தியாளர்கள் கவலையடைந்துள்ளனர்.

நாட்டின் உப்பு உற்பத்தியில் குஜராத் மாநிலத்துக்கு அடுத்தப்படியாக 2-வது இடத்தில் தூத்துக்குடி மாவட்டம் உள்ளது. இங்கு ஆண்டுக்கு சராசரியாக 25 லட்சம் டன் உப்பு உற்பத்தியாகும்.

இந்த ஆண்டு பல்வேறு சூழ்நிலைகளால் 60 சதவீதம் அதாவது 15 லட்சம் டன்  மட்டுமே உப்பு உற்பத்தியாகியுள்ளது. இதில் 10 லட்சம் டன் உப்பு ஏற்கனவே விற்பனையாகிவிட்டது. தற்போது சுமார் 5 லட்சம் டன் அளவுக்கு உப்பளங்களில் கையிருப்பு உள்ளது.

இந்நிலையில் மழைக்காலம் தொடங்கியிருப்பதால் உப்பு விலை அதிகரித்துள்ளது. தூத்துக்குடியில் உற்பத்தியாகும் உப்பு டன்னுக்கு ரூ.1400 முதல் ரூ.1500 வரை விலை போகிறது. இதனால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

இந்நிலையில் தனியார் நிறுவனம் ஒன்று குஜராத் மாநிலத்தில் இருந்து 27,500 டன் உப்பை தூத்துக்குடிக்கு கொண்டு வந்துள்ளது. கப்பல் மூலம் இந்த உப்பு நேற்று தூத்துக்குடி வஉசி துறைமுகம் வந்து சேர்ந்தது.

இதில் 15 ஆயிரம் டன் உப்பு மேட்டூரில் உள்ள கெம்பிளாட் நிறுவனத்துக்கு கொண்டு செல்லப்படுவதாகவும், மீதமுள்ள உப்பை தூத்துக்குடியிலேயே சேமித்து வைக்கவும் அந்நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. பிரீ புளோ உப்பு தயாரிப்பதற்காக குஜராத் உப்பை பயன்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தூத்துக்குடியில் உப்பு விலை உயர்ந்துள்ளதால், தனியார் நிறுவனம் குஜராத்தில் இருந்து கப்பல் மூலம் உப்பை குறைந்த விலைக்கு வாங்கி வந்துள்ளது. தொடர்ந்து இதேபோல் குஜராத்தில் இருந்து உப்பு வருமானால், தூத்துக்குடியில் உற்பத்தி செய்யப்பட்டு சேமித்து வைக்கப்பட்டுள்ள உப்பின் விலை குறைய வாய்ப்புள்ளதாக உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.