ETV Bharat / state

உயிரிழந்த காவல் உதவி ஆய்வாளரின் குடும்பத்துக்கு ரூ.27 லட்சம் இழப்பீடு...!

தூத்துக்குடி: சாலை விபத்தில் உயிரிழந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளரின் குடும்பத்துக்கு, லோக்அதாலத் நிகழ்ச்சியின் மூலம் 27 லட்சம் ரூபாய் உடனடி இழப்பீடு வழங்கப்பட்டது.

lok adhalat
author img

By

Published : Sep 14, 2019, 11:01 PM IST

தூத்துக்குடியில் உள்ள மாவட்ட நீதிமன்றம் மற்றும் விளாத்திக்குளம், கோவில்பட்டி, திருச்செந்தூர், சாத்தான்குளம் உள்ளிட்ட இடங்களில் உள்ள அமர்வு நீதிமன்றங்களில் லோக் அதாலத்தில் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதை மாவட்ட நீதிபதி சுரேஷ் விஸ்வநாத் தொடங்கிவைத்தார்.

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், “மக்கள் நீதிமன்றத்தின் மூலம் 3,705 நீதிமன்ற வழக்குகள், 924 வங்கி வழக்குகள் என மொத்தம் 4 ஆயிரத்து 629 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன. இதில் 50 நீதிமன்ற வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு முடிவு எட்டப்பட்டு 3 கோடியே 2 லட்சத்து 97 ஆயிரத்து 500 ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது.

lok adhalat

இதில், சாலை விபத்தில் உயிரிழந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் குடும்பத்துக்கு உடனடி இழப்பீடாக ரூ. 27 லட்சத்து 50 ஆயிரம் வழங்கப்பட்டது. மேலும், சிறிய வழக்குகள் அனைத்தும் முடித்து வைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.

Intro:சாலை விபத்தில் இறந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளரின் குடும்பத்தினருக்கு ரூ.27 லட்சம் உடனடி இழப்பீடு: லோக்அதாலத் நிகழ்ச்சியின் மூலம் வழங்கப்பட்டது - மாவட்ட நீதிபதி சுரேஷ் விஸ்வநாத் பேட்டி
Body:
தூத்துக்குடி

தூத்துக்குடியில் உள்ள மாவட்ட நீதிமன்றம் மற்றும் விளாத்திக்குளம், கோவில்பட்டி, திருச்செந்தூர், சாத்தான்குளம் உள்ளிட்ட இடங்களில் உள்ள அமர்வு நீதி மன்றங்களில் இன்று லோக் அதாலத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது. தூத்துக்குடியில் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற லோக்அதாலத் நிகழ்ச்சியை மாவட்ட நீதிபதி சுரேஷ் விஸ்வநாத் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து மக்கள் நீதிமன்றம் குறித்து நீதிபதி சுரேஷ் விஸ்வநாத் பேட்டி அளிக்கையில்,

இன்று நடைபெறும் மக்கள் நீதிமன்றத்தின் மூலம் 3,705 நீதிமன்ற வழக்குகள், 924 வங்கி வழக்குகள் என மொத்தம் 4 ஆயிரத்து 629 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. மாவட்டம் முழுவதிலும் லோக் அதாலத் நிகழ்ச்சிக்கு முன்னோட்டமாக கடந்த இரு தினங்களாக நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இதில் 50 நீதிமன்ற வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு முடிவு எட்டப்பட்டு ரூ.3 கோடியே 2 லட்சத்து 97 ஆயிரத்து 500-க்கு தீர்வு காணப்பட்டது. இது தவிர நீதிமன்ற விசாரணைக்கு வராத வழக்குகள் வழியில் 21 லட்சத்து 28 ஆயிரத்து 600 ரூபாய்க்கு தீரவுகாணப்பட்டு மொத்தம் ரூ.3 கோடியே 24 லட்சத்து 26 ஆயிரத்து 600 முடிவு காணப்பட்டுள்ளது.

மாவட்ட நீதிமன்றத்தில் இன்று தொடங்கப்பட்ட மக்கள் நீதிமன்ற விசாரணையில், சாலை விபத்தில் உயிரிழந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் குடும்பத்திற்கு உடனடி இழப்பீடாக ரூ. 27 லட்சத்து 50 ஆயிரம் பெற்று தரப்பட்டது. இன்று நடைபெறும் மக்கள் நீதிமன்றத்தின் வழக்கு விசாரணை மூலமாக ரூ.10 முதல் 15 கோடி வரை வழக்குகளுக்கு தீர்வு காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லோக் அதாலத் நிகழ்ச்சியில் சிறு, சிறு வழக்குகள் அனைத்தும் முடித்து வைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.

பேட்டியின்போது முதலாவது மாவட்ட கூடுதல் நீதிமன்ற நீதிபதி, தலைமை குற்றவியல் நீதிபத, சார்பு நீதிபதிகள் ஆகியோர் உடனிருந்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.