தூத்துக்குடி மாவட்டம் மணக்கரையில் பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய ரவுடி துரைமுத்துவை காவலர் சுப்ரமணியன் பிடிக்க முயன்றபோது துரைமுத்து வீசிய நாட்டு வெடிகுண்டு வெடித்து காவலர் உயிரிழந்தார்.
மற்றொரு குண்டை வீச முயன்றபோது, கையிலேயே வெடித்து படுகாயமடைந்த நிலையில், ரவுடி துரைமுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது கூட்டாளிகள் மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், உயிரிழந்த காவலர் சுப்ரமணியனின் சொந்த ஊரான பண்டாரவிளையில் 30 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து, திருநெல்வேலியிலிருந்து கொலைக் குற்றவாளியான துரை முத்துவின் உடல் அவரது சொந்த ஊரான மங்கல குறிச்சியில் உள்ள கல்லறைத் தோட்டத்திற்கு கொண்டுவரப்பட்டது.
பின்னர் அவரது உடல் வைக்கப்பட்டிருந்த பெட்டியில் அவர் உடல் மீது சுமார் இரண்டரை அடி உயரம் கொண்ட அரிவாள் வைத்து அவரது உறவினர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: பொது இடங்களில் விநாயகர் சிலைகளுக்கு அனுமதியில்லை: உயர் நீதிமன்ற மதுரை கிளை