ETV Bharat / state

'விலை இருந்தும் விற்பனை செய்ய முடியவில்லை' - மழையில் அழுகிய சின்ன வெங்காயத்தால் விவசாயிகள் வேதனை!

தூத்துக்குடி: ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட சின்ன வெங்காயம், தொடர் மழையால் சேதமடைந்ததைக் கண்டு விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

farmers life
farmers life
author img

By

Published : Dec 10, 2019, 8:12 PM IST

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, எட்டயபுரம், விளாத்திகுளம், கயத்தார் ஆகிய பகுதிகளில், ஒரு லட்சம் ஏக்கர் மானவாரி நிலங்களில் விவசாயிகள் சின்ன வெங்காயத்தைச் சாகுபடி செய்திருந்தனர். கடந்த சில நாட்களாகப் பெய்து வந்த தொடர் மழையால், நோய்த் தாக்குதல் ஏற்பட்டதுடன், மழை நீரில் தண்டுகள் அழுகியும் வெங்காயப் பயிர்கள் சேதமடைந்துள்ளன.

அழுகியதை நீக்கும் விவசாயிகள்
அழுகியதை நீக்கும் விவசாயிகள்

சின்ன வெங்காயத்துக்கு நல்ல விலை இருந்தும், தொடர்மழை மற்றும் நோய்த் தாக்கத்தினால், பயிரிட செலவு செய்த தொகை கூட தங்களுக்கு கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து கரிசல்பூமி விவசாயிகள் சங்கத்தின் தலைவர் வரதராஜன் கூறுகையில், " தூத்துக்குடி மாவட்ட மானவாரிப் பகுதிகளில் கடந்த ஆண்டு சுமார் 80 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள், சின்ன வெங்காயத்தைச் சாகுபடி செய்திருந்தனர். ஆனால், போதிய விலை கிடைக்கவில்லை. இந்த ஆண்டு தொடக்கத்தில் பெய்த மழையை நம்பி, சென்ற ஆண்டை விட கூடுதலாக 20 ஆயிரம் ஏக்கர் பரப்பில் சின்ன வெங்காயத்தைப் பயிரிட்டனர்.

அழுகி போன சின்ன வெங்காயம்
அழுகிப் போன சின்ன வெங்காயம்

சின்ன வெங்காயத்தை, முதன்மைப் பயிராக மட்டுமின்றி, மிளகாய், உளுந்து செடிகளுக்கிடையே ஊடு பயிராகவும் பயிர் செய்திருந்தனர். புரட்டாசிப் பட்டத்தில் நட்டால், மார்கழி இறுதியில் அறுவடை செய்யலாம். தைப் பொங்கலுக்கு ஓரளவு விலை கிடைத்தாலும் பரவாயில்லை என நினைத்தோம். ஆனால், கடந்த சில நாட்களாகப் பெய்து வந்த தொடர் மழையால், நிலங்களில் மழை நீர் தேங்கியது. ஆங்காங்கே, வாய்க்கால் வெட்டி தண்ணீரை வடித்து காப்பாற்றினோம்.

ஆனால், தொடர் மழையால் குளம் போல நீர் தேங்கி நின்றது. இதனால், வெங்காயத் தண்டுகள் அழுகியதுடன், காற்றிலும் ஈரப்பதம் இருந்ததால் வெங்காயமும் விளைச்சல் இல்லாமல் போனது வேதனையைத் தருகிறது. பல பகுதிகளில் நோய்த் தாக்குதலும் ஏற்பட்டுள்ளது.

தற்போது வெங்காயத்துக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு, விலையேற்றத்தால் ஒரு கிலோ ரூ.130யையும் தாண்டி விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. வெங்காயத்துக்கான தேவை அதிகமிருந்தும் விற்பனை செய்ய வெங்காயமில்லை. மழையில் வெங்காயம் சேதமடையாமல் இருந்திருந்தால், விவசாயிகளுக்கு இரண்டு முதல் மூன்று மடங்கு லாபம் கிடைத்திருக்கும்.

விதைப்பு, களை எடுப்பு, பூச்சி மருந்து தெளிப்பு என ஓர் ஏக்கருக்கு ரூ.35,000 முதல் 45,000 வரை செலவு செய்துள்ளோம். தற்போது ஏற்பட்டுள்ள நோய்த் தாக்கத்தினால் பாதித் தொகை கூடக் கிடைக்காது.

வேதனையில் தவிக்கும் விவசாயி
வேதனையில் தவிக்கும் விவசாயி

நோய்த் தாக்கிய பயிர்களைப் பிடுங்கி எறிவதைவிட வேறு வழியில்லை. வெங்காயம் பெருத்த ஏமாற்றத்தைத் தந்துள்ளது. பயிர் காப்பீட்டுத் தொகையை விரைவாக வழங்கிட வேண்டும். அத்துடன், ஏக்கருக்கு செலவு செய்த தொகையில் பாதியாவது அரசு வழங்க வேண்டும்" என மன வேதனையுடன் தெரிவித்தார்.

இதையும் படிங்க: இந்திய வேளாண் சாகுபடியில் புரட்சிகர முன்னேற்றங்கள் வேண்டும்!

Intro:"விலை இருந்தும் விற்பனை செய்ய முடியவில்லை"- மழையில் அழுகிய சின்ன வெங்காயத்தால் வேதனையில் விவசாயிகள்!
Body:

தூத்துக்குடியில் ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட சின்ன வெங்காயம், தொடர் மழையால் சேதமடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, எட்டயபுரம், விளாத்திகுளம், கயத்தார் ஆகிய தாலுகாக்களில், ஒரு லட்சம் ஏக்கர் மானவாரி நிலங்களில் விவசாயிகள் சின்ன வெங்காயத்தை சாகுபடி செய்திருந்தனர். கடந்த சில நாள்களாகப் பெய்துவந்த தொடர் மழையால் நோய்த்தாக்குதல் ஏற்பட்டதுடன், மழைநீரில் தண்டுகள்

அழுகி சேதமடைந்துள்ளன. சின்ன வெங்காயத்துக்கு நல்ல விலை இருந்ததும், தொடர்மழை மற்றும் நோய் தாக்கத்தினால், பயிரிட செலவு செய்த தொகை கூட தங்களுக்கு கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதாக வேதனையுடன் கூறுகிறார்கள் விவசாயிகள்.

இதுகுறித்து கரிசல்பூமி விவசாயிகள் சங்கத்தின் தலைவர் வரதராஜன் கூறுகையில், ``தூத்துக்குடி மாவட்ட மானாவாரிப் பகுதிகளில் கடந்த ஆண்டு சுமார் 80,000 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள், சின்ன வெங்காயத்தை சாகுபடி செய்திருந்தார்கள். ஆனால், போதிய விலை கிடைக்கவில்லை.
இந்த ஆண்டு தொடக்கத்தில் பெய்த மழையை நம்பி, கடந்த ஆண்டைவிடக் கூடுதலாக 20,000 ஏக்கர் பரப்பில் சின்ன வெங்காயத்தைப் பயிரிட்டனர். சின்ன வெங்காயத்தை, முதன்மைப் பயிராக மட்டுமின்றி, மிளகாய், உளுந்து செடிகளுக்கு இடையே ஊடு பயிராகவும் பயிர் செய்திருந்தனர். புரட்டாசிப் பட்டத்தில் நட்டால், மார்கழி இறுதியில் அறுவடை செய்யலாம். தைப் பொங்கலுக்கு ஓரளவு விலை கிடைத்தாலும் பரவாயில்லை என நினைத்தோம்.
ஆனால், கடந்த சில நாள்களாகப் பெய்துவந்த தொடர் மழையால், நிலங்களில் மழைநீர் தேங்கியது. ஆங்காங்கே, வாய்க்கால் வெட்டி தண்ணீரை வடித்து காப்பாற்றினோம். ஆனால், தொடர் மழையால் குளம்போல தேங்கி நின்றது. இதனால், வெங்காயத் தண்டுகள் அழுகியதுடன், காற்றிலும் ஈரப்பதம் இருந்ததால் வெங்காயமும் விளைச்சல் இல்லாமல் உள்ளது. இதில், பல பகுதிகளில் நோய்த்தாக்குதலும் ஏற்பட்டுள்ளது.

தற்பொழுது வெங்காயத்துக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு, விலையேற்றத்தால் ஒரு கிலோ 130-ஐயும் தாண்டி விற்பனையாகிக்கொண்டிருக்கிறது. வெங்காயத்துக்கான தேவை அதிகம் இருந்தும் விற்பனை செய்ய வெங்காயம் இல்லை. தற்போது தொடர்மழையால் சேதமடையாமல் இருந்திருந்தால், விவசாயிகளுக்கு இரண்டு முதல் மூன்று மடங்கு லாபம் கிடைத்திருக்கும். விதைப்பு, களை எடுப்பு, பூச்சிமருந்து தெளிப்பு என ஓர் ஏக்கருக்கு ரூ.35,000 முதல் 45,000 வரை செலவு செய்தநிலையில், தற்போது ஏற்பட்டுள்ள நோய்த் தாக்கத்தினால் பாதிதொகைகூடக் கிடைக்காது.

நோய் தாக்கிய பயிர்களைப் பிடுங்கி எறிவதைவிட அவற்றை வேறொன்றும் செய்ய முடியாது. இந்தாண்டு வெங்காயம் பெருத்த ஏமாற்றத்தைத் தந்துள்ளது. பயிர்காப்பீட்டுத் தொகையை விரைவாக வழங்கிட வேண்டும். அத்துடன், ஏக்கருக்கு செலவு செய்த தொகையில் பாதியாவது அரசு வழங்க வேண்டும்” என்றார் வேதனையுடன்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.