ETV Bharat / state

தூத்துக்குடியில் ஆஷ் துரை மணி மண்டபம் புதுப்பிக்கும் பணி; பாஜக எதிர்ப்பு - தூத்துக்குடியில் ஆஷ் துரை மணி மண்டபம் புதுப்பிக்கும் பணி

தூத்துக்குடியில், ஆஷ் துரை மணி மண்டபம் புதுப்பிக்கும் பணிக்கு பாஜக மற்றும் பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

தூத்துக்குடியில் ஆஷ் துரை மணி மண்டபம் புதுப்பிக்கும் பணி; பாஜக எதிர்ப்பு

author img

By

Published : Jul 22, 2022, 10:13 PM IST

Updated : Jul 22, 2022, 10:56 PM IST

தூத்துக்குடி : நாடு 75வது சுதந்திர தினவிழாவை கொண்டாட தயாராகி வரும் நிலையில் தூத்துக்குடியில் சுதந்திர போராட்ட தியாகிகளை அவமதிக்கும் செயல் நடைபெறுவதாக பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு எழுந்துள்ளது.

ஆங்கிலேயர் நம்மை ஆண்ட போது, திருநெல்வேலி, தூத்துக்குடி ஒருங்கிணைந்த ஜில்லா கலெக்டராகவும், நீதிபதியாகவும் இருந்தவர் ராபர்ட் வில்லியம் எஸ்கோர்ட் என்ற ஆஷ்துரை. இவர், கொடுங்கோல் ஆட்சியாளராக கருதப்பட்டவர். சுதந்திரத்திற்காக போராடிய வஉசிக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியவர்.

வஉசி சிறையில் அடைக்கப்பட்டதால் அன்றைய இளைஞராக இருந்த வாஞ்சிநாதன் ஆவேசமடைந்து 1911ம் ஆண்டு ஜூன் 17ம் தேதி காலை 10.30 மணிக்கு கொடைக்கானல் செல்வதற்காக குடும்பத்தோடு சென்ற ஆஷ்துரையை வாஞ்சிநாதன் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தார். பின்னர், தன்னை
ஆங்கிலேய போலீஸ் சுற்றி வளைத்ததும் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவத்திற்கு பிறகு பலர் சுதந்திர போராட்டத்தில் தீவிரம் காட்டியதாக வரலாறு கூறுகிறது.

இந்திய நாட்டுக்காக உயிர்நீத்த வாஞ்சிநாதனுக்கு இன்னும் மணியாச்சி ரயில் நிலையம் அருகே நினைவு மண்டபமோ, சின்னமோ அமைக்கப்படவில்லை. அதனை யாரும் கண்டு கொள்வாரும் இல்லை. பொதுமக்களின் பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு மணியாச்சி ரயில் நிலையத்திற்கு வாஞ்சி மணியாச்சி என்ற பெயர் சூட்டப்பட்டது. ஆனால் நினைவு மண்டபம் அமைக்கப்படாதது இன்னும் பலருக்கு அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

ஆனால் ஜில்லா கலெக்டராக இருந்த ஆங்கிலேயர் ஆஷ் துரைக்கு தூத்துக்குடி பீச் ரோட்டில் பழைய துறைமுகம் எதிர்புறம் நினைவு மண்டபம் கட்டப்பட்டது. சுதந்திர போராட்டத்திற்காக அன்றைய வீரன் வாஞ்சிநாதனுக்கு வாஞ்சி மணியாச்சியில் நினைவு மண்டபமோ, சின்னமோ இன்னும் நிறுவப்படவில்லை.

தூத்துக்குடியில் ஆஷ் துரை மணி மண்டபம் புதுப்பிக்கும் பணி; பாஜக எதிர்ப்பு
தூத்துக்குடியில் ஆஷ் துரை மணி மண்டபம் புதுப்பிக்கும் பணி; பாஜக எதிர்ப்பு

ஆனால் வ.உ.சி.க்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கிய ஆஷ் துரைக்கு தூத்துக்குடியில் ஏற்கனவே நிறுவப்பட்ட நினைவு மண்டபத்தை புதுப்பிக்கும் பணிக்கு மக்கள் வரி பணத்தை செலவு செய்வதா என எதிர்ப்பு எழுந்துள்ளது.

16 ஸ்தூபிகள் 8 தூண்டுகளுடன் எண் கோண அமைப்பில் இந்த மண்டபம் அமைக்கப்பட்டது. நாளடைவில் புல்புதர் சூழ்ந்த மண்டபமாக காட்சியளித்தது. இடைப்பட்ட காலத்தில் தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் வஉசி கல்வி கழகத்தினர் இந்த இடத்தை பராமரித்து வந்தாக கூறப்படுகிறது.

தற்போது ஆஷ்துரை நினைவிடத்தை தூத்துக்குடி மாநகராட்சி பல லட்சம் செலவு செய்து புதுப்பித்து வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்பு உருவாகியுள்ளது. சிலர் சமூக வலைதளங்களில் இதுகுறித்து கேள்வி எழுப்பி பதிவிட்டும் வருகின்றனர்.

நம் நாட்டிற்காக போராடிய வாஞ்சிநாதனுக்கு இன்னும் மணிமண்டபம், நினைவு சின்னம் இல்லை. ஆனால் ஆஷ் துரைக்கு இவ்வளவு செலவு தேவையா என சர்ச்சை வாதங்களும் நடந்து வருகிறது.

இதுகுறித்து, பாஜக தொழிநுட்ப பிரிவு செயலாளர் தங்க மாரியப்பன், செய்தியாளர்களிடம் கூறுகையில், "வஉசி, வாஞ்சி நாதன் தேச பணியை கொச்சைப்படுத்தும் விதமாக இந்த ஆஷ் துரை மணி மண்டபத்தை புதுப்பிக்கும் பணி நடைபெறுகிறது. தூத்துக்குடி சுதந்திர போராட்ட 4 தியாகிகளை சுட்டு கொன்றவர் இந்த ஆஷ் துரை. இவரின் கொடுங்காளான இந்த செயலை இந்த மணி மண்டபத்தில் பதிவு செய்ய வேண்டும்.

மேலும், குழந்தைகளுக்கு வரலாறு தெரியும் வண்ணம் வாஞ்சி நாதன், வஉசி, சுப்பிரமணிய சிவா போன்ற தலைவர்களின் வரலாற்றை இந்த ஆஷ் துரை மணி மண்டபத்தில் பதிவு செய்ய வேண்டும் என கூறினார்.

பாஜக மாநில தொழிற்பிரிவு செயலாளர் கொம்பன் K.பாஸ்கர், தூத்துக்குடியில் கண்டன போஸ்டர்களை ஒட்டியுள்ளார். அதில், 'வஉசியின் 150வது ஆண்டு விழாவை கொண்டாடி வரும் இவ்வேளையில் நாட்டுக்காக பாடுபட்டு தன் சொத்துக்களை எல்லாம் இழந்து சிறையில் செக்கிழுத்த செம்மல் வஉசி சிதம்பரம் பிள்ளைக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கிய கொடுங்கோலன் ஆஷ் துரைக்கு தூத்துக்குடியில் மணி மண்டபமா? ஐயா வஉசி, வாஞ்சிநாதனை அவமதித்தால் நாட்டுக்காக நாங்களும் போராடுவோம் என ஆங்காங்கே போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

மேலும், மாநகராட்சி அலுவலகத்தில் பாஜகவினர் திரண்டு வந்து மனுவும் அளித்தனர். இதுகுறித்து தூத்துக்குடி மாநகராட்சி அதிகாரிகளிடம் சிலரிடம் பேசியபோது, நகரில் தொன்மையான கட்டடத்தை பழுது பார்த்து புனரமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் தான் ஆஷ் துரை நினைவிடத்தை பராமரிக்கிறோம் என்றனர்.

75வது சுதந்திர திருநாளை கொண்டாட நாடே தயாராகி வருகிறது. அந்த வகையில் சுதந்திர போராட்டத்தோடு தொடர்புடைய ரயில் ரயில்நிலையங்களில் 5 நாட்கள் விழா நடத்த ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதில் மதுரை கோட்டத்தில் உள்ள வாஞ்சி மணியாச்சி ரயில்நிலையத்திலும் 5 நாட்கள் விழா நடைபெறவுள்ளது. இந்த நாளில் சுதந்திரத்திற்காக தன்னுயிரை விட்ட வாஞ்சிநாதனுக்கு நினைவு மண்டபம், சின்னம் மணியாச்சியில் நிறுவப்பட வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Last Updated : Jul 22, 2022, 10:56 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.