ETV Bharat / state

'கமல் செய்வது எல்லாமே தில்லு முல்லுதான்...!' -  ராஜேந்திரபாலாஜி - Makkal Nedhi Mayam

தூத்துக்குடி: கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் ஒன்றும் ஐநா சபையால் அங்கீகாரம் பெற்ற அமைப்பு கிடையாது. அவர் செய்வது எல்லாமே தில்லு முல்லுதான் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார்.

ஐ.நா.வின் அங்கீகாரம் பெற்ற அமைப்பு கிடையாது
author img

By

Published : May 14, 2019, 7:12 PM IST

Updated : May 15, 2019, 12:30 PM IST

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், தேர்தல் பரப்புரையின்போது 'இந்து தீவிரவாதி' என பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இதனைக் கண்டித்து, 'கமல்ஹாசனின் நாக்கு அறுக்கப்பட வேண்டும்' என்று தமிழ்நாடு பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடும் விமர்சனம் செய்தார். இதற்கு, மக்கள் நீதி மய்யம் கட்சி பொதுச்செயலாளர் அருணாச்சலம், "அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனது பதவி பிரமாண உறுதிமொழியை மீறி இருக்கிறார். எனவே, அவர் பதவி விலக வேண்டும்" என்று சாடி அறிக்கை வெளியிட்டார்.

இதற்கு பதிலளித்து, தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய ராஜேந்திர பாலாஜி, "கமல்ஹாசன் கட்சி ஒன்றும், ஐநா சபையின் அங்கீகாரம் பெற்ற அமைப்பு கிடையாது. அவர்கள் செய்வது எல்லாமே தில்லு முல்லு. இந்தியாவின் மத நல்லிணக்கத்தை கெடுப்பதுபோல செயல்படுகிறார்கள். நான் எந்த வகையிலும் பதவிப் பிரமாண உறுதிமொழியை மீறவில்லை. பயங்கரவாத தூண்டுதல் செய்யவில்லை. மக்களின் மனதை புண்படுத்தும் விதமாக பேசவில்லை.

இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்துதான் என்று கமல்ஹாசன் கூறுவது இந்துக்களை வம்புக்கிழுக்கும் வேலை. கமல்ஹாசன் இதை சொல்வதற்கு அவர் ஐஎஸ் இயக்கத்தில் இருந்து பணம் வாங்கிக் கொண்டாரா? இதனை மத்திய புலனாய்வுத் துறை விசாரிக்க வேண்டும். அவர் சொன்ன கருத்துக்கு ஒரு தமிழனாக, இந்தியக் குடிமகனாக இருந்து என்னுடைய கருத்தைத்தான் தெரிவித்தேன்.

ராஜேந்திர பாலாஜி

அவர் இப்படிப் பேசுவது பிரிவினைவாதம், மதவாதத்தை தூண்டுவதாகதான் அர்த்தம். அவரை பின்னால் இருந்து இயக்குவது யார்? எனக்கு யாரையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை. ஆனால், அவர் மீதுள்ள குற்றத்தை மறைப்பதற்காகவும், மீண்டும் தவறு செய்வதற்கு தூண்டுவதற்கும் செய்கின்ற வேலையைதான் இந்த அறிக்கை உள்ளது.

கமல்ஹாசனுக்கு ஆதரவு தெரிவித்த கே.எஸ். அழகிரி, கி.வீரமணி ஆகியோர் தமிழ்நாட்டில் இருப்பதற்கு தகுதி இல்லாதவர்கள். எப்போதும் கி.வீரமணி மக்கள் மனதை புண்படும்படியாகவும், திமிராகத்தான் பேசுவார். அவர் பேச்சை அடக்கிப் பேச வேண்டும்" என்றார்.

தூத்துக்குடி

மக்கள் நீதி மைய கட்சித் தலைவர் கமலஹாசன் தமிழகத்தில் இடைத்தேர்தலாக கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இதில் அவர், இஸ்லாமியர்கள் அதிகம் வாழ்கிற பகுதியில் வாக்கு சேகரிக்க சென்ற போது இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து தான் என பேசி இருந்தார். கமலஹாசனின் இந்த கருத்துக்கு தமிழகம் முழுவதும் பலத்த கண்டனங்களும் எதிர்ப்புகளும் கிளம்பி உள்ளது.
கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடும் கண்டனம் தெரிவித்ததோடு கமலஹாசனின் நாக்கு அறுக்கப்பட வேண்டிய நிலைமை ஏற்படும் என்ற கருத்து தெரிவித்திருந்தார்.

அதேபோல் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, கி. வீரமணி ஆகியோர் கமலஹாசனின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் மக்கள் நீதி மைய கட்சி பொதுச்செயலாளர் அருணாச்சலம் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனது பதவி பிரமாண உறுதிமொழியை மீறி இருக்கிறார். எனவே அவர் பதவி விலக வேண்டும் என கூறியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தூத்துக்குடியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது

கமலஹாசன் கட்சி ஐ.நா. சபையின் அங்கீகாரம் பெற்ற அமைப்பு கிடையாது. அவர்கள் செய்வது எல்லாமே தில்லு முல்லு.  அவர்கள் இந்தியாவின் மத நல்லிணக்கத்தை கெடுப்பது போல செயல்படுகிறார்கள். நான் எந்த வகையிலும் பதவிப் பிரமாண உறுதிமொழியை மீறவில்லை. பயங்கரவாத தூண்டுதல் செய்யவில்லை. மக்களின் மனதை புண்படுத்தும் விதமாக பேசவில்லை.

இந்தியா மதசார்பற்ற நாடாக விளங்கிக் கொண்டிருக்கும் வேளையில் இந்தியாவில் முதல் தீவிரவாதி இந்து தான் என்று கமல்ஹாசன் கூறுவது இந்துக்களை வம்புக்கிழுக்கும் வேலை. கமலஹாசன் இதை சொல்வதற்கு  அவர் ஐஎஸ் இயக்கத்தில் இருந்து பணம் பணம் வாங்கிக் கொண்டாரா?. இதனை மத்திய புலனாய்வுத் துறை விசாரிக்க வேண்டும். அவர் சொன்ன கருத்துக்கு ஒரு தமிழனாக இருந்து இந்திய குடிமகனாக இருந்து என்னுடைய கருத்தை நான் தெரிவித்தேன்.

அவர் இப்படிப் பேசுவது பிரிவினைவாதம், மதவாதத்தை தூண்டுவதாக தான் அர்த்தம். அவரை பின்னால் இருந்து இயக்குவது யார்?.
எனக்கு யாரையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை.
கமலஹாசனுக்கு கூறிய கருத்துக்கு,  ‌நான் பதில் கூறியது ஆலோசனையாக,அறிவுரையாக தான் நான் எனது கருத்தை பதிவு செய்தேன். ஆனால்
அவர் மீதுள்ள குற்றத்தை மறைப்பதற்காகவும், மீண்டும் மீண்டும் அவர் தவறு செய்வதற்கு தூண்டுவதற்கும் செய்கின்ற வேலையை தான் இந்த அறிக்கை.

கமலஹாசனின் கருத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் கே.எஸ். அழகிரி, கீ.வீரமணி தமிழ்நாட்டில் இருப்பதற்கு தகுதி இல்லாதவர்கள். திராவிட தலைவர் வீரமணி  அவர் மக்கள் மனதை புண்படுத்தும் விதமாக தான் பேசுவார். அவர் எப்பொழுதுமே திமிராகத்தான் பேசுவார். அவர் பேச்சை அடக்கி பேச வேண்டும்.

கமலஹாசன் பேசிய பேச்சு இந்திய ஒருமைப்பாட்டை, சட்டம் ஒழுங்கை சீர்குலைப்பதற்கான பேச்ச. அதற்காக அவர் வருத்தம் தெரிவிக்க வேண்டும். அவர் வருத்தம் தெரிவித்தால் நாங்கள் எங்களது கருத்தை வாபஸ் பெற்றுக் கொள்வோம். பிரிவினைவாதத்தை தூண்டக்கூடிய வகையில் பேசுகிற கட்சியினை தடை செய்ய வேண்டும். ஆகவே மக்கள் நீதி மையம் தடைசெய்யப்பட வேண்டிய கட்சி.
அரசியலுக்கு வர நினைப்பவர்கள் தனது தனிப்பட்ட வாழ்க்கை முறையிலும் ஒழுக்கமாக இருக்கவேண்டும். ஆனால் ஆனால் கமலஹாசன் அவ்வாறு கிடையாது.

திமுக தலைவர் மு க ஸ்டாலின் ஒரு பச்சோந்தி. திமுக தலைவர் ஸ்டாலின் பாஜகவில் இணைவதற்கு இரண்டாம்கட்ட தலைவர்கள் மூலமாக தூதுவிட்டு வருகிறார்.

திமுக தலைவர் ஸ்டாலின் நம்பினவர்கள் நடுத்தெருவில் தான் நிற்பர்.
அரசியலில் நம்பகத்தன்மை இல்லாத தலைவர் ஸ்டாலின் என்றார்.

Last Updated : May 15, 2019, 12:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.