ETV Bharat / state

தூத்துக்குடி சந்தையில் 70 நாட்களுக்குப் பிறகு விலை குறைந்த மீன்கள் - ஆர்வமுடன் வாங்க வந்த மக்கள்

author img

By

Published : Jun 24, 2023, 7:19 PM IST

தூத்துக்குடி - திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடித் துறைமுகத்தில் சுமார் 70 நாட்களுக்குப் பின் கிலோவுக்கு 100 முதல் 150 ரூபாய் வரை மீன்கள் விற்பனைக்கு வந்துள்ளது. மீன்களின் விலை கணிசமாக குறையத் தொடங்கியுள்ளதால் மக்கள் மீன்களை வாங்க ஆர்வம் காட்டியுள்ளனர்.

70 நாட்களுக்கு பிறகு மந்தமடைந்த நாட்டுபடகு மீன்கள்
70 நாட்களுக்கு பிறகு மந்தமடைந்த நாட்டுபடகு மீன்கள்
தூத்துக்குடி சந்தையில் 70 நாட்களுக்குப் பிறகு விலை குறைந்த மீன்கள் - ஆர்வமுடன் வாங்க வந்த மக்கள்

தூத்துக்குடி: திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் சுமார் 70 நாட்களுக்குப் பின் கிலோவுக்கு 100 முதல் 150 ரூபாய் வரை மீன்கள் விற்பனைக்கு வந்துள்ளன. மீன்களின் விலை குறையத் துவங்கி உள்ளதால் பொதுமக்கள் ஏராளமானோர் மீன்களை வாங்க முனைப்புக் காட்டியுள்ளனர். மேலும் அப்பகுதியில் மீன்களின் விலை மந்தமான நிலையில் பொது மக்கள் மகிழ்ச்சியுடன் வாங்கிச் செல்கின்றனர்.

தூத்துக்குடியில் கடந்த ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை, 61 நாட்களுக்கு மீன்பிடித் தடைகாலம் அமல்படுத்தப்பட்டது. இதனை முன்னிட்டு, விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லாத காரணத்தினாலும், கேரள கடல் பகுதியில் கடந்த 20 நாட்களாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லாத காரணத்தினாலும் தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீனவர்கள் மீன் பிடித்துள்ளனர். திரேஸ்புரம் நாட்டுப்படகு மீனவர்கள் பிடித்த மீன்களுக்கு, மீன்களின் வரத்து குறைவானதால் பொது மக்கள் மத்தியில் கடந்த 70 நாட்களாக நல்ல விலை கிடைத்துள்ளது. இதனால் மீன்களின் விலையும் உச்சம் கொண்டு இருந்தது.

இந்நிலையில், தூத்துக்குடி, திரேஸ்புரம் நாட்டுப்படகு மீனவர்கள் கடந்த ஒரு வாரமாக கடல் பகுதியில் காற்று வீசக்கூடும் என்ற காரணத்திற்காக கடலில் மீன்பிடிக்க, குறைவாகவே கடலுக்குள் சென்றனர். மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஆழ் கடலுக்கு, மீன் பிடிக்கச் சென்ற ஏராளமான நாட்டுப் படகு மீனவர்கள் இன்று கரை திரும்பினர்.

கரை திரும்பிய மீனவர்களிடம் மீன்களின் வரத்தும் குறைவாகவே காணப்பட்டது. ஒரு கிலோ சீலா மீன் 1,300 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், இன்று 1,000 ரூபாய் வரை விற்பனையானது. சுமார் 550 ரூபாய் முதல் 600 ரூபாய் வரை விற்பனையான விலாமீன் ஒரு கிலோ ரூபாய் 350 முதல் 400 வரை விற்பனையானது.

இதனைத் தொடர்ந்து எப்போதும் விலை குறையாத ஊலி மீன் முன்னர் 600 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது ஒரு கிலோ ஊலி மீன் 450 ரூபாய் வரை விற்பனையானது. மேலும் பாறை மீன் முன்னதாக ஒரு கிலோ 400 ரூபாய் முதல் 450 ரூபாய் விற்பனையான நிலையில், தற்போது கிலோ 350 ரூபாய் வரையில் விற்பனையாகியுள்ளது.

சூறை ஒரு கிலோ 80 ரூபாய் வரையிலும், வங்கடை பாறை மீன் கூடை 1,500 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. சாலை மீன்கள் வரத்து இல்லாததால் ஒரு கூடை அதிக அளவாக மூவாயிரம் ரூபாய் வரை விற்பனையாகியுள்ளது. மீன்களின் விலை கணிசமாக குறையத் தொடங்கியுள்ளதால் ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து மீன்களை வாங்கிச் செல்கின்றனர்.

இதையும் படிங்க: எலும்பும் தோலுமாக மெலிந்து காட்சியளிக்கும் அரிசிக் கொம்பன் யானை? - வனத்துறை அதிகாரிகள் சொல்வது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.