ETV Bharat / state

உயிரிழந்த காவலர் சுப்பிரமணியன் உடலுக்கு டிஜிபி தலைமையில் காவலர்கள் மரியாதை! - காவலர் சுப்பிரமணியனுக்கு மரியாதை

தூத்துக்குடி: வெடிகுண்டு வீசி கொல்லப்பட்ட காவலர் சுப்பிரமணியன் உடலுக்கு டிஜிபி திரிபாதி மரியாதை செலுத்தினார்.

thoothukkudi
thoothukkudi
author img

By

Published : Aug 19, 2020, 4:57 PM IST

Updated : Aug 19, 2020, 5:35 PM IST

தூத்துக்குடி மாவட்டத்தில் குற்றவாளியை பிடிக்க சென்ற போது, வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்ட காவலர் சுப்ரமணியன் உடல் சொந்த ஊரான பண்டாரவிளை பகுதிக்கு கொண்டுவரப்பட்டது. காவலர் உடலுக்கு தமிழ்நாடு காவல்துறைத் தலைமை இயக்குநர் (டிஜிபி) திரிபாதி மரியாதை செலுத்தினார்.

அதைத்தொடர்ந்து துப்பாக்கிக் குண்டுகள் முழங்க காவலர் சுப்பிரமணியன் உடலுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து, அவரது உடல் உறவினர்கள் அஞ்சலிக்குப் பின் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்படுகிறது. காவலர் உடலை பெற்ற சகோதரர்கள் சித்தர், சிவா, பத்திரகாளி ஆகியோர் கதறி அழுத சம்பவம் அனைவரையும் கண்கலங்க வைத்தது.

இதையும் படிங்க: இறுதிச்சடங்கிற்கு சோகத்துடன் தயாராகும் கிராமம்; வீர மரணமடைந்த காவலர் உடலுக்கு அஞ்சலி செலுத்துகிறார் திரிபாதி!

Last Updated : Aug 19, 2020, 5:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.