ETV Bharat / state

கர்ப்பிணி வீட்டில் காவல் துறையினர் அடாவடி!

தூத்துக்குடி: கர்ப்பிணி வீட்டுக்குள் அத்துமீறி காவல் துறையினர் அடாவடி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

கர்ப்பிணி வீட்டில் காவல் துறையினர் அடாவடி!
கர்ப்பிணி வீட்டில் காவல் துறையினர் அடாவடி!
author img

By

Published : May 12, 2020, 10:24 AM IST

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை சந்தோஷ் நகரைச் சேர்ந்தவர் சின்னதுரை. இவருடைய மனைவி முத்துராணி(வயது 26). இந்த தம்பதிக்கு ஆண்குழந்தை உள்ள நிலையில், தற்போது முத்துராணி ஆறு மாத கர்ப்பிணியாக உள்ளார். சின்னத்துரை சென்னையில் காவலராக பணியாற்றிவருகிறார். பணி நிமித்தம் காரணமாக சின்னதுரை சென்னையிலும், முத்துராணி அவருடைய உறவினர் கருப்பசாமியின் பராமரிப்பில் சந்தோஷ் நகரிலும் வசித்து வந்தனர்.

கரோனா பணி ஊரடங்கு காரணமாக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ள நிலையில் சின்னதுரை-முத்து ராணியும் செல்போன் மூலமாக நலம் விசாரித்துவந்தனர். இந்நிலையில் நண்பர் ஒருவரின் உதவியோடு சின்னதுரை சென்னையிலிருந்து கார் மூலம் நேற்று தூத்துக்குடி வந்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து பணிக்காக இன்று அவர் மீண்டும் சென்னை திரும்பியுள்ளார்.

காவலர் சின்னதுரை, சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு வந்த தகவல் அக்கம்பக்கத்தினர் மூலமாக கிராம நிர்வாக அதிகாரிக்கு தெரியவந்துள்ளது. அதன்பேரில் வீட்டிற்கு வந்து ஆய்வு செய்த அலுவலர்கள் வீட்டில் உள்ள அனைவரையும் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தி விட்டு சென்றுள்ளனர்.

இதைத் தொடர்ந்து புதுக்கோட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துராஜ், காவலர் ஒருவருடன் முத்து ராணியின் வீட்டிற்குச் சென்று விசாரித்துள்ளனர். அப்போது தகாத வார்த்தையால், கருப்பசாமியை திட்டியதாக தெரிகிறது. இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவரை காவல் துறையினர் அடித்து கீழே தள்ளியுள்ளனர். அப்போது இந்த அத்துமீறல்களை செல்போனில் படம்பிடித்த முத்துராணியையும் காவல் துறையினர் கீழே தள்ளி செல்போனை பிடுங்கி சென்றுள்ளனர்.

இந்த சம்பவத்தில் கீழே விழுந்ததில் மயக்கமடைந்த முத்துராணியை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக கருப்பசாமி சேர்த்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க...’வீடுகளை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாற்ற வேண்டும்’- ராதாகிருஷ்ணன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.