ETV Bharat / state

கோவில்பட்டியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்! - கோவில்பட்டியில் பிளாஸ்டிக் பறிமுதல்

தூத்துக்குடி: கோவில்பட்டியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

plastic_seized
பிளாஸ்டிக் பறிமுதல்
author img

By

Published : Feb 8, 2020, 12:06 AM IST

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவின் பெயரில் கோவில்பட்டி நகரப் பகுதிகளில் தமிழ்நாடு அரசினால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து, நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

கோவில்பட்டியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்

கோவில்பட்டி தெற்கு பஜார், மார்கெட் ரோடு, கிருஷ்ணன் கோவில் ரோடு, பூ மார்கெட், மெயின் ரோடு ஆகியப் பகுதிகளில் இருக்கும் வணிக நிறுவனங்களில் சுகாதார ஆய்வாளர்கள் குழு செய்த இந்த ஆய்வில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் சுமார் ஒரு டன் பறிமுதல் செய்யப்பட்டது.

பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்த மற்றும் பதுக்கி வைத்திருந்த வணிக நிறுவனங்கள், 2 குடோன்கள் ஆகியவற்றின் உரிமையாளர்களுக்கு ரூ.60 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மூன்று முறைத் தொடர்ந்து இதுபோன்று தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் கடை உரிமம் ரத்து செய்யப்படுவதுடன், நீதிமன்ற நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்று நகராட்சி அலுவலர்கள் எச்சரித்துள்ளனர்.

Intro:கோவில்பட்டியில் தடை செய்யப்பட்ட 1டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் - ரூபாய் 60,000 அபராதம் - நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
Body:கோவில்பட்டியில் தடை செய்யப்பட்ட 1டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் - ரூபாய் 60,000 அபராதம் - நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள தெற்கு பஜார், மார்க்கெட் ரோடு, பூ மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் கடைகளில் நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் இன்று ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் சுமார் ஒரு டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் தடை செய்யப்பட்டிருந்த பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருந்தவர்களுக்கு ரூ.60,000 அபராதமாக விதிக்கப்பட்டது

தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி உத்தரவின் பெயரில் கோவில்பட்டி நகர பகுதிகளில் தமிழக அரசினால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். கோவில்பட்டி தெற்கு பஜார், மார்க்கெட் ரோடு ,கிருஷ்ணன் கோவில் ரோடு, பூ மார்க்கெட், மெயின் ரோடு ஆகிய பகுதிகளில் இருக்கும் வணிக நிறுவனங்களில் சுகாதார ஆய்வாளர்கள் குழு ஆய்வு இந்த ஆய்வில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் சுமார் ஒரு டன் பறிமுதல் செய்யப்பட்டது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்த வணிக நிறுவனங்கள் மற்றும் 2 குடோன்களில் பிளாஸ்டிக் பொருட்களை பதுக்கி வைத்திருந்த உரிமையாளர்கள் ஆகியோருக்கு ரூபாய் 60,000 அபராதமாக விதிக்கப்பட்டது. தொடர்ந்து இதுபோன்று தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மூன்று முறை வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டால் கடை உரிமம் ரத்து செய்வதுடன் , நீதிமன்ற நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.