கத்தோலிக்கர்களின் ஈஸ்டர் தவக்காலம் சாம்பல் புதன் நாளான மார்ச் 1ஆம் தேதி தொடங்கியது. இதன் முக்கிய காலமான இயேசு கிறிஸ்து தனது சீடர்களுக்கும் மக்களுக்கும் கல்வாரி மலையில் தனது பாடுகளை அறிவிக்கும் விதமாக குருத்தோலை ஞாயிறு கொண்டப்படுகிறது.
அதன்படி இன்று உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கையில் குருத்தோலை ஞாயிறு கடைப்பிடித்து வருகின்றனர்.
இந்நிலையில் தூத்துக்குடியில் உள்ள பழமைவாய்ந்த பனிமய மாதா போராலயத்தில் அருட்தந்தை லெரின்டிரோஸ் தலைமையில் தென்னை குருத்தோலைகளை கையில் ஏந்தியவாறு கிறிஸ்துவர்கள் ஓசன்னா பாடியவாறு பவனி சென்றனர். ஆலயம் முன்பிலிருந்து தொடங்கிய பவனி முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்து மீண்டும் ஆலயத்தில் நிறைவுபெற்றது. இதைத் தொடர்ந்து சிறப்பு திருப்பலி இன்று நடைபெற்றது.
பின் அருட்தந்தை லெரின்டிரோஸ் செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூறியதாவது, இயேசு கிறிஸ்து கல்வாரி மலை பாடுகளை அறிவிக்கும் விதமாக குருத்தோலை ஞாயிறு கடைப்பிடிக்கப்படுகிறது. இறைவனின் ஆட்சி பூமியில் மலர வேண்டும், அன்பு, நீதி, உண்மை, சகோதரத்துவம், சமத்துவம் நிலவ வேண்டும் என்ற எண்ணத்துடன் சிறப்பு பிரார்த்தனை செய்யப்படும் என்று கூறினார்.