தமிழ்நாடு கார் வியாபாரிகள் மற்றும் ஆலோசகர் கூட்டமைப்பின் தூத்துக்குடி மாவட்ட தலைவர் ராம சேகர பாண்டியன், மாவட்ட நிர்வாகிகளுடன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம், இ-பாஸ் முறையில் இருந்து விலக்கு அளிக்க கோரியும், வாகன வியாபாரிகளுக்கு வாகன சந்தை அமைக்க மாநகராட்சி பகுதியில் இடம் ஒதுக்கி தரக்கோரியும் மனு அளித்தனர்.
இது குறித்து பேசிய ராம சேகரபாண்டியன், எங்களது தொழில், அனைத்து ஊர்களுக்கும் சென்று பழைய வாகனங்களை வாங்கி வந்து விற்பனை செய்வதாகும். ஒவ்வொரு முறையும் இ-பாஸ் பெற்றுச் செல்வது என்பது நடைமுறையில் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துவதுடன், வாழ்வாதாரத்தை பாதிக்கிறது. கடந்த 5 மாதங்களாக கரோனா வைரஸ் பாதிப்பினால் எங்களுக்கு தொழில் வாய்ப்புகள் மிகவும் குறைந்துள்ளது.
எனவே, எங்கள் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு இ-பாஸ் முறையை ரத்து செய்து, எங்கள் சங்க அடையாள அட்டை உள்ள நபர்களுக்கு அனுமதி பெற்றுத் தர வழிவகை செய்ய வேண்டும் என்றார்.