தமிழ்நாட்டின் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இன்று (ஏப். 6) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
இந்த நிலையில் தூத்துக்குடி மூன்றாவது வார்டு ராஜிவ் நகர் பகுதியில் 13 வருடங்களாக 300 குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இவர்களுக்கு குடியிருப்புகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர், ஆளுநர், மாவட்ட நிர்வாக அலுவலர்கள் ஆகியோரிடம் மனு அளித்துள்ளனர்.
ஆனால், பல முறை முயற்சி செய்தும் அலுவலர்கள் பேச்சுவார்த்தை மட்டும் நடத்திவந்தனர். ஆனால் இன்றுவரை இந்தப் பகுதிக்கு பட்டாவை அரசு வழங்கவில்லை.
இதைக் கண்டித்து 1,340 வாக்களர்கள் ராஜிவ் நகர் பகுதியிலுள்ள குடியிருப்பு நல சங்கத்தில் வைத்து, 1 முதல் 11 தெரு வரையுள்ள மக்கள் ஒன்றுசேர்ந்து தேர்தலை புறக்கணித்து ஒன்றாகக் கூடி சமைத்து சாப்பிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: 'காவலருக்கும், வாக்காளர்களுக்குமிடையே மோதல்: செஞ்சி அருகே பதற்றம்'