ETV Bharat / state

தனியார் ஆக்கிரமிப்பில் இருக்கும் குளம்: மீட்டுத்தர வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு! - தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு

தூத்துக்குடி: தனிநபர் ஆக்கிரமிப்பிலிருந்து குளத்தினை மீட்டுத் தர வலியுறுத்தி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தனியார் ஆக்கிரமிப்பில் இருக்கும் குளம்: மீட்டுத்தர வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு!
Pond issue in thoothukudi
author img

By

Published : Oct 19, 2020, 6:24 PM IST

தூத்துக்குடி மாவட்டம் சேர்வைக்காரன் மடம் அருகேவுள்ள சிவஞானபுரத்தைச் சேர்ந்த பொதுமக்கள் இன்று (அக்.19) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

இது குறித்து அவர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

"சிவஞானபுரம் பகுதியில் மருதாணி குட்டம் என்ற குளம் உள்ளது. இந்தக் குளத்து நீரை எங்கள் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் விவசாயத்திற்காகவும், இதர வீட்டு தேவைகளுக்காகவும் பயன்படுத்திக்கொள்ளலாம் என கடந்த காலங்களில் நடந்த கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் இயற்றியிருந்தோம்.

ஆனால் தற்போது தனியார் ஒருவரின் நலனுக்காக இந்தக் குளத்திலிருந்து பம்பு செட்டுகள் மூலம் நீர் உறிஞ்சி வியாபார ரீதியாக வெளியே எடுத்துச் செல்லப்படுகிறது. இதனைத் தடுக்க வலியுறுத்தி பலமுறை அலுவலர்களிடம் மனு அளித்தோம்.

இது குறித்து அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தக் குளத்து நீரை நம்பி மஞ்சள் விவசாயிகள், ஏனைய சிறு குறு விவசாயிகளும் தங்களது வாழ்வாதாரத்தை அமைத்துள்ளதால், மாவட்ட ஆட்சியர் எங்கள் மனுவின் கீழ் நடவடிக்கை எடுத்து தனிநபர் ஆக்கிரமிப்பிலிருந்து குளத்தினை மீட்டுத்தர வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.