ETV Bharat / state

பரோட்டா கடை உரிமையாளரின் மகன் வெட்டிக் கொலை - தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி: பரோட்டா கடை உரிமையாளரின் மகனை கொலை செய்து விட்டு தப்பியோடிய கும்பலை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

பரோட்டா கடை
பரோட்டா கடை
author img

By

Published : Nov 2, 2020, 10:08 AM IST

தூத்துக்குடி தாளமுத்துநகர் ஆ.சண்முகபுரத்தைச் சேர்ந்த வேல்ராஜ் மகன் வாழ்வாங்கி (27). இவர் கிருஷ்ணராஜபுரம் மெயின் ரோட்டில் பரோட்டா கடை மற்றும் மட்டன் ஸ்டால் நடத்தி வந்தார். நேற்றிரவு (நவ.,2) 11 மணி அளவில் கடையை பூட்டிக்கொண்டிருந்தபோது திடீரென வந்த 3 பேர் கொண்ட அடையாளம் தெரியாத கும்பல் வாழ்வாங்கியை அரிவாளால் வெட்டியதாகக் கூறப்படுகிறது.

பின்னர் கல்லாவில் இருந்த பணத்தைக் கொள்ளை அடித்துவிட்டு அக்கும்பல் தப்பியோடியுள்ளது. படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வாழ்வாங்கியை, தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இது குறித்து தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், துணைக் கண்காணிப்பாளர் கணேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். இந்தச் சம்பவம் குறித்து பரோட்டா கடைக்கு எதிர்புறம் உள்ள பிரபல மசாலா கம்பெனியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் முகக்கவசம் அணிந்தபடி கைகளில் வாளுடன் வந்து வாழ்வாங்கியை வெட்டியுள்ளது சிசிடிவி காட்சிகளில் இருந்து தெரியவந்துள்ளது.

அப்பகுதியில் ஏற்கனவே நடந்த கொலை குற்றத்தில் தொடர்ச்சியாக நடந்த கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது போன்ற பல கோணங்களில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலையாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:திண்டுக்கல்லில் தாய் கண் முன்னே மகன் வெட்டிப் படுகொலை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.