ETV Bharat / state

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க எதிர்ப்பு: பண்டாரம்பட்டி மக்கள் தர்ணா - Covid 19

ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலைக்கு கொடுக்கப்பட்ட அனுமதியைத் திரும்பப் பெற வலியுறுத்தி பண்டாரம்பட்டி கிராம மக்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.

பண்டாரம்பட்டி கிராம மக்கள் தர்ணா போராட்டம்

author img

By

Published : Apr 28, 2021, 7:51 AM IST

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில், ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அதற்கு எதிராகப் பலரும் போராட்டம் நடத்திவருகின்றனர்.

2018ஆம் ஆண்டு ஆலைக்கு எதிராகப் போராட்டம் நடைபெற்ற கிராமங்களில் ஒன்று பண்டாரம்பட்டி. இந்நிலையில் அக்கிராம மக்கள், ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதைக் கண்டித்து நேற்று (ஏப்ரல் 27) மாலை திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. மேலும் அக்கிராமத்தைச் சுற்றிலும் பாதுகாப்புப் பணிக்காக இரண்டடுக்கு காவல் துறையினரின் பாதுகாப்பு போடப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் அதிரடிப்படையினரும் ஊருக்குள் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டது.

பின் தூத்துக்குடி மாவட்ட சார் ஆட்சியர் சிம்ரன்ஜித் சிங் கலோன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்தப் பேச்சுவார்த்தையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அளித்த உறுதியின்பேரில் பண்டாரம்பட்டி கிராம மக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்துசென்றனர்.

மேலும் இது தொடர்பாக நாளை பண்டாரம்பட்டி கிராம பொதுமக்கள் 10 பேர் கொண்ட குழுவினர் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜை சந்தித்து மனு அளிப்பதற்கு ஏற்பாடு செய்வதாக உறுதியும் அளிக்கப்பட்டது.

இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களின் ஒருங்கிணைப்பாளர் வசந்தி கூறுகையில், "ஸ்டெர்லைட் ஆலைக்கு கொடுக்கப்பட்ட அனுமதியைக் கண்டித்து ஊர் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டோம். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அளித்த உறுதியின்பேரில்தான் தற்காலிகமாகப் போராட்டத்தைக் கைவிட்டு கலைகிறோம்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரை நாளை சந்தித்துப் பேச உள்ளோம். ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் பணியை மேற்பார்வை செய்ய அமைக்கப்படும் குழுவில் பண்டாரம்பட்டி, சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் ஐந்து பேர் கட்டாயம் இடம்பெற செய்ய வலியுறுத்துவோம். இந்த முடிவையும் அனைத்து கிராம மக்களுடன் கலந்து ஆலோசித்த பின்னரே இறுதி செய்வோம்.

ஏனெனில் ஸ்டெர்லைட் பிரச்சினை என்பது பண்டாரம்பட்டி கிராமத்திற்கானது மட்டுமல்ல; ஒட்டுமொத்த தூத்துக்குடி மாவட்டத்திற்குமான பிரச்சினை. எனவே அனைத்து கிராம மக்களின் கருத்துகளையும் கேட்ட பின்பே இறுதியான முடிவை அறிவிப்போம்" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.