தமிழ்நாடு சட்டப்பேரவையில் விதி எண் 110இன் கீழ் 9 இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகங்கள் ரூ.9 கோடி மதிப்பில் கட்டப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
அதன்படி தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களை உள்ளடக்கிய இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்தை அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமசந்திரன் இன்று (பிப்.11) திறந்துவைத்தார்.
இந்நிகழ்ச்சிக்கு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமை தாங்கினார். மேலும் நிகழ்ச்சியில் கோவில்பட்டி பூவனநாதர் சுவாமி கோயில், தென்காசி பண்பொழி திருமலை குமாரசாமி கோயிலில் பணிபுரிந்தவர்களின் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணைகளையும், குற்றால நாதர் கோயிலில் பணியாற்றிய ஊழியர் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் குடும்ப நல நிதியையும் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வழங்கினார்.
இதையும் படிங்க: பவானீஸ்வரர் கோயில் பிரகார மண்டபம் கட்டுமான பணி தொடக்கம்