ETV Bharat / state

கழுகுமலை அருகே சோகம்: குழந்தையை அடித்து கொன்ற தாய், ஆண் நண்பர் கைது - mother arrested

தூத்துக்குடி: கழுகுமலை அருகே ஒரு வயது குழந்தையை அடித்துக் கொன்ற தாய், அவரது ஆண் நண்பரான பால் வியாபாரி ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

child murder
author img

By

Published : Aug 6, 2019, 6:40 AM IST

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம், கழுகுமலை அடுத்த பழங்கோட்டையைச் சேர்ந்தவர் ராஜு (40). இவரது மனைவி வடகாசி(35) மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக பணிபுரிந்துவருகிறார். இந்த தம்பதிக்கு ஒரு வயதில் தானேஷ் பிரபாகரன் என்ற ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில், வடகாசிக்கும், கழுகுமலையைச் சேர்ந்த பால் வியாபாரியான சாமி என்ற சாமிநாதனுக்கும்(32) இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இதையறிந்த வடகாசியின் கணவர் ராஜு இருவரையும் கண்டித்துள்ளார்.இருவருக்கும் அடிகடி தகராறு ஏற்படுவதால் ராஜு குழந்தை தானேஷ் பிரபாகரனை சங்கரன்கோவிலில் உள்ள மாமியார் வீட்டில் விட்டுள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் ராஜு, தனது மனைவி வடகாசியிடம், சங்கரன்கோவிலில் உள்ள குழந்தையை தூக்கிக் கொண்டு வருமாறு கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து வடகாசி சங்கரன்கோவிலுக்குச் சென்று குழந்தையை தூக்கிக் கொண்டு பழங்கோட்டைக்கு வராமல் கழுகுமலையில் உள்ள சாமிநாதன் வீட்டிற்கு சென்றுள்ளார்.

குழந்தையை தூக்க சென்ற வடகாசி மாலைஆகியும் வீடுதிரும்பாததால், சந்தேகமடைந்த ராஜூ, கழுகுமலையில் உள்ள சாமிநாதன் வீட்டிற்கு சென்று பார்த்த போது, வடகாசி குழந்தையுடன் அங்கிருப்பது தெரியவந்தது. மேலும் குழந்தை அழுதுக்கொண்டே இருந்ததால், ஆத்திரமடைந்த இருவரும் குழந்தையை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதையறிந்த ராஜூ குழந்தை மீட்க அருகில் சென்றபோது, இருவரும் குழந்தையுடன் பின்பக்க வாசல் வழியாக தப்பிச் சென்றனர். பின்னர் காயமடைந்த நிலையில் இருந்த குழந்தையை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு இருவரும் கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பிரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

child murder
கொல்லப்பட்ட குழந்தை

இது குறித்து, ராஜு கழுகுமலை காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் குழந்தையைக் கொன்ற தாய், அவரது ஆண் நண்பரான பால் வியாபாரி ஆகிய இருவரையும் கைது செய்தனர்

.

Intro:கழுகுமலையில் 1 வயது குழந்தையைக் அடித்து கொன்ற தாய், பால் வியாபாரி கைது Body:

கழுகுமலையில் தனது ஒன்றேகால் வயது குழந்தையைக் கொன்ற தாய் மற்றும் அவரது கள்ளக்காதலன் பால் வியாபாரியை போலீஸார் கைது செய்தனர்.

கழுகுமலையையடுத்த பழங்கோட்டையைச் சேர்ந்தவர் ராஜு(40). மின்வாரிய அலுவலகத்தில் ஊழியரான இவரது மனைவி வடகாசி(35). தம்பதிக்கு தானேஷ் பிரபாகரன்(ஒன்றேகால்) என்ற மகன் இருந்தார்.

வடகாசிக்கும், கழுகுமலை ஆறுமுகம் நகரைச் சேர்ந்த சோமசுந்தரம் மகன் பால் வியாபாரி சாமி என்ற சாமிநாதனுக்கும்(32) இடையே பழக்கம் இருந்ததாம். இதையறிந்த ராஜு இருவரையும் கண்டித்துள்ளார்.

அதையடுத்து, தானேஷ் பிரபாகரனை சங்கரன்கோவிலில் உள்ள வடகாசியின் தாய் வீட்டில் வளர்ந்து வந்துள்ளார்

இந்நிலையில், நேற்று ராஜு வடகாசியை சங்கரன்கோவிலுக்கு அனுப்பி, குழந்தையை அழைத்துக் கொண்டு வருமாறு கூறியதை தொடர்ந்து சங்கரன்கோவிலுக்குச் சென்று குழந்தையை எடுத்து வந்த வடகாசி, பழங்கோட்டைக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து, ராஜு, வடகாசியை தேடி கழுகுமலையில் உள்ள சாமி என்ற சாமிநாதன் வீட்டிற்கு சென்று பார்த்த போது, அங்கு வடகாசி தன் குழந்தையுடன் இருந்தது தெரியவந்ததாம். மேலும், குழந்தையின் அழும் சத்தம் கேட்டதாம். இதையடுத்து, குழந்தையை மீட்கச் சென்ற போது, குழந்தையை வடகாசியும், சாமிநாதனும் சரமாரியாக தாக்கியுள்ளது தெரியவந்தது. இதையடுத்து, குழந்தையை மீட்க முயன்ற போது, வடகாசி மற்றும் சாமி என்ற சாமிநாதன் ஆகிய இருவரும் குழந்தையை தூக்கிவிட்டு தப்பியோடிவிட்டார்களாம்.
பின்னர் விசாரித்த போது, குழந்தை காயமடைந்த நிலையில் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்ததார்களாம். ஆனால் மருத்துவர்கள் பரிசோதித்த போது குழந்தை இறந்தது தெரியவந்தது.
இதையடுத்து, ராஜு கழுகுமலை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவல் தெரிந்தவுடன் கழுகுமலை போலீஸார் வழக்குப் பதிந்து, ஒன்றேகால் வயது குழந்தையைக் கொன்ற தாய் மற்றும் அவரது கள்ளக்காதலனான பால் வியாபாரியை போலீஸார் இன்று கைது செய்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.