ETV Bharat / state

கொள்ளையடிக்கப்பட்ட 126 சவரன் தங்க நகைகள் மீட்பு ; தனிப்படை காவல்துறையினரின் சிறப்பான சம்பவம்

தூத்துக்குடி சுற்றுவட்டாரத்தில் கொள்ளையடிக்கப்பட்ட சுமார் 126 சவரன் நகைகள் மற்றும் 48,42,000 ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை தனிப்படை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

கொள்ளையடிக்கப்பட்ட 125 பவுன் தங்க நகைகள் ; தனிப்படை காவல்துறையினர் பறிமுதல்

author img

By

Published : Sep 20, 2022, 10:29 PM IST

தூத்துக்குடி கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திருட்டு, மற்றும் கொள்ளை வழக்கு குற்றச்சம்பவம் அதிகமாக வந்த வண்ணம் இருக்கையில், இது சம்பந்தமாக குற்றவாளிகளைக் கண்டு பிடிக்கும் பொருட்டு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணனின் உத்தரவின் பெயரில் சாத்தான்குளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அருள் மேற்பார்வையில், சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையில், தனிப்படை அமைத்து குற்றவாளிகளைத் தேடி வந்தனர்.

அப்போது, பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய தூத்துக்குடி, சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த கொடி மலரிடம் 126 சவரன் எடையுள்ள தங்க நகைகள் மற்றும் 48,42,000 ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் கைப்பற்றப்பட்டன.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”இன்று(செப்.20) அதிகாலை 03.30 மணிக்கு பன்னம்பாறை பகுதியில் தனிப்படையினர் வாகனத் தணிக்கை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது அந்த சமயம் TN-92H2890 என்ற இரு சக்கர வாகனத்தில் வீடுகளில் கதவு பூட்டை உடைக்க பயன்படுத்தக்கூடிய ஸ்குரு டிரைவர், கட்டிங்பிளேயர் மற்றும் இரண்டு பிளாஸ்டிக் கவர்களில் நகைகளுடன் வந்து கொண்டிருந்த கட்டாரிமங்கலத்தைச்சேர்ந்த, கொடிமலர் (40) என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர்.

அதில், அவர் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் 9 திருட்டு வழக்குகளிலும், நாசரேத் காவல் நிலையத்தில் 2 திருட்டு வழக்குகளிலும், தட்டார்மடம் காவல் நிலையத்தில் 4 திருட்டு வழக்குகளிலும், மெய்ஞானபுரம் காவல் நிலையத்தில் 1 திருட்டு வழக்கிலும், திருச்செந்தூர் காவல் நிலையத்தில் 3 திருட்டு வழக்குகளிலும் சம்மந்தபட்டவர் என்பது தெரியவந்தது.

மேலும், அவரிடம் இருந்து சுமார் 126 சவரன் எடையுள்ள தங்க நகைகள், திருட்டு பணத்தில் வாங்கிய இரு சக்கர வாகனம், கலர் டிவி ஆக மொத்தம் ரூபாய் 48,42,000/- மதிப்புள்ள பொருட்கள் கைப்பற்றபட்டன. மேற்படி சொத்துகள் அனைத்தும் நீதிமன்றம் மூலம் உரிய உரிமையாளர்கள் வசம் ஒப்படைக்கப்படும்.

மேலும், தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் 205 குண்டாஸ் வழக்குகள் இதுவரை போடப்பட்டு இருக்கின்றன. ரவுடியுசம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மாற்றத்தை தேடி விழிப்புணர்வு மூலம் குற்ற சம்பவங்கள் தடுக்கப்பட்டு வருகின்றன.

கொள்ளையடிக்கப்பட்ட 126 சவரன் தங்க நகைகள் மீட்பு ; தனிப்படை காவல்துறையினரின் சிறப்பான சம்பவம்

மேற்படி, இவ்வழக்குகளை கண்டுபிடித்து சிறப்பாகப் பணியாற்றிய சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் பாஸ்கரன், சிறப்பு உதவி ஆய்வாளர் டேவிட் கிறிஸ்துராஜ், முதல் நிலைக்காவலர் கதன், காவலர் அகஸ்டின், அகஸ்டின் உதயகுமார், காவலர் அருண்குமார் ஆகியோருக்கு பாராட்டுகள்” என்றார்.

இதையும் படிங்க: மத்திய அரசு பெட்ரோல் விலையைக் குறைக்க வேண்டும் - சுரேஷ் கண்ணன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.