ETV Bharat / state

உயிரிழந்த முதியவருக்கு கரோனா உறுதி - இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் பீதி - thoothukudi corona update

தூத்துக்குடி: கரோனாவால் முதியவர் உயிரிழந்தது தெரியாமல் அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட திமுக எம்எல்ஏ கீதா ஜீவன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் தங்களுக்கும் கரோனா தொற்று பரவியிருக்குமா என்ற பீதியில் உள்ளனர்.

corona
corona
author img

By

Published : Jul 15, 2020, 11:14 AM IST

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட டூவிபுரம் 2ஆவது தெருவைச் சேர்ந்தவர் நீதிபால்ராஜ். முதியவரான இவர், உடல்நலக்குறைவு காரணமாக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பலனளிக்காமல் உயிரிழந்தார். பின்னர் இவருக்கு கரோனா பரிசோதனை மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், மருத்துவமனைக்கு சென்ற உறவினர்கள் முதியவரின் உடலைக் கேட்டு பிரச்னை செய்யவே, மருத்துவமனை நிர்வாகம் அவரது குடும்பத்தினரிடம் உடலை ஒப்படைத்தது. அவருக்கு நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையின் முடிவில், கரோனா தொற்று இருப்பது இன்று (ஜூலை 15) தெரியவந்தது. இதனிடையே, முதியவரின் உடல் நேற்று (ஜூலை 14) காலை 10 மணியளவில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, தூத்துக்குடி மையவாடியில் எரியூட்டப்பட்டது.

இதில், 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். உயிரிழந்த முதியவருக்கு தூத்துக்குடி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் கீதா ஜீவன் நேரில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளார். உயிரிழந்த முதியவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால், முதியவரின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

இந்த தகவல் அறிந்த தூத்துக்குடி மாநகராட்சி நகர்நல அலுவலர் அருண்குமார், மையவாடியில் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். மேலும், இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்களை பரிசோதனை செய்யவும் மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க:அமைச்சர் காரில் கரோனா தொற்று ஏற்படாத வகையில் பாதுகாப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.